112

பத்துப்பாட்டு

96 - 7. காலை கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் மாழாந்து (95) - அவனைக்கண்ட மற்றை நாட்காலத்தில் என்னைக் கண்டவர் நெரு நல் வந்தவனல்லனென்று மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி,;

மாழாந்தென்பதனை இதனொடு கூட்டுக.

பல நறுநாற்றங்களும் தானுடைமையின், வண்டுசூழ் நிலையென்றான்.;

98. கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப - இது கனவாயிருக்குமென்று கலங்கிய என்னுடைய நெஞ்சு நனவென்று துணிய,;

99. வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப வலிய மிடியானுண்டாகிய வருத்தம் பொதிந்த கூட்டத்தார் மனம் மகிழ்ச்சி மிக,;

100. கல்லா இளைஞர் சொல்லி காட்ட - அவற்குரிய புகழ்களைத் தாங்கள் முற்றக்கற்று என்பின்னின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்ட,;

கல்லாவென்பது செய்யாவென்னுமெச்சம்.

இனித் தத்தம் சிறுதொழிலன்றி வேறொன்றுங்கல்லாத இளைஞர் நெருநல்வந்தவன் இவனென்று அரசனுக்குச் சொல்லிக்காட்ட வென்று மாம்; என்றது, இவன் வேறுபாடு 1கூறிற்றாம்.

101. கதுமென கரைந்து வம்மென கூஉய் - அதுகேட்டு அவர்களைக் கடுக அழைத்துவாருமென்று வாயிலோர்க்குக் கூறி யாங்கள் சென்ற பின் தான் அணுகவாருமென்று அழைக்கையினாலே,

"ஏனோருந் தம்மென" (மதுரைக். 747) என்புழித் தம்மென்பது தாருமென நின்றாற் போல வம்மென்பது வாருமென்னும் பொருட்டாய் நின்றது.;

102. அதன் முறை கழிப்பிய பின்றை - அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள் செய்து முடித்தபின்பு,

பதன் அறிந்து - காலமறிந்து,;

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,;

105 - 6. [ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை, யூழி னூழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சுட்ட கொழு குறை


1 "காலைக் கண்டோர் மருளும் வண்டு சூழ்நிலை" (பொருந. 96-7) என்றதைக் காண்க.

2 "உண்ணீருண் ணீரென் றுபசரியார் தம்மனையி, லுண்ணாமை கோடி பெறும்" (ஒளவையார் பாடல்) என்பது இங்கே நினைவிற்கு வருகின்றது.