117

2 - பொருநராற்றுப்படை

மானினது வருத்துதலையுடைய குருளை முலையையுண்டலைக் கைவிடாத இளைய பருவத்தே,;

யாளியை ஆளியென்றார், "கடிசொலில்லை" (தொல். எச்ச. சூ. 56) என்பதனான், "நாயே பன்றி" (தொல். மரபு. சூ. 8) என்னும் சூத்திரத்து, ‘ஆயுங்காலை' என்பதனாற் குருளையென்பது முடித்தாம்.;

141. ஞெரேரென - கடுக,;

142. தலை கோள் வேட்டம் களிறு அட்டாங்கு - முற்பட இரையைக் கோடற்குக் காரணமான வேட்டையிலே களிற்றைக் கொன்றாற் போல,;

143. 1இரு பனம்போந்தை தோடும் - கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும்,;

"தோடே மடலே" (தொல். மரபு. சூ. 86) என்னுஞ் சூத்திரத்து, ‘பிறவும்' என்றதனாற் போந்தை முடித்தாம். அதனிடத்தினின்றும் போந்ததனாற் போந்தையென்றார்; "இரும்பனைக் கொண்டு கடை கழுமிய வடங்கு சிறை வலனகலத்து" என்றார் பிறரும்.;

143 - 4. [ கருஞ்சினை, யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலும் :]

கரு சினை வேம்பின் அரம் வாய் அம் குழை தெரியலும் - கரிய கொம்பினையுடைய வேம்பினுடைய 2வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிராற்செய்த மாலையும்,;

145 - 6. ஓங்கு இரு சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் ஒருகளத்து அவிய - நறிய மாலைகளில் மேலாதற்குக் காரணமான பெரிய தலையிலே ஏனையோர்சூடும் அடையாளப்பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சேரனும் பாண்டியனும் ஒருகளத்தே படும்படி,

147 - 8. 3வெண்ணி தாக்கிய வெரு வரு நோன் தாள் கண் ஆர்


1 "மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ", "வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசிவெண் டோடு .......... விரைஇ" (புறநா. 22 : 21, 100 : 3 - 5); "வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் ............. சூட்டி" (சிலப். 25 : 146 - 7)

2 வாளரம் - ஒருவகை அரம்; "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த" (அகநா. 24 : 1); "வாளரந் துடைத்த வைவேல்" சீவக. 461

3 கரிகாற் பெருவளத்தான் வெண்ணிப் பறந்தலையிற் பொருதமை, "கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப், பொருதுபுண் ணாணிய சேர லாதன்", "காய்சின முன்பிற் பெரும்பெயர்க் கரிகால், ஆர்கலி நறவின் வெண்ணி வாயிற், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின், இமிழிசை முரசம் பொருகளத் தொழியப், பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய்வலி யறுத்த ஞான்றை" (அகநா. 55 : 10 - 11, 246 : 8 - 13) என்பவற்றால் அறியலாகும்.