118

பத்துப்பாட்டு

கண்ணி கரிகால் வளவன் - 1வெண்ணி யென்கின்ற ஊரிடத்தேபொருத அச்சந்தோன்றுகின்ற வலியையுடைய முயற்சியையும் 2கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையினையுமுடைய கரிகாற்சோழன்,;

3 "முச்சக் கரமும்" என்னுங் கவியானே கரிகாலாதலுணர்க.

தாயமெய்திப் (132) பிறந்து (137) மிகுவலிசெருக்கித் (140) தெவ்வர் ஏவல் கேட்பச் (133) செய்யார் தேஎம் தெருமரல்கலிப்ப (134) நாடு செகிற்கொண்டு நாடொறும் வளர்த்தல் காரணமாகக் (138) குருளை (139) களிறட்டாங்கு (142) இருபெரு வேந்தரும் அவியத் (146) தாக்கிய (147) கரிகால்வளவனென முடிக்க.

149 - 50. [ தாணிழன் மருங்கி லணுகுபு குறுகித், தொழுது :] 4நிழல் மருங்கில் தாள் அணுகுபு குறுகி தொழுது - அருளைத்தன்னிடத்திலேயுடைய திருவடிகளை அண்ணிதாக நின்றுசேர்ந்து வணங்கி,;

150. முன் நிற்குவிராயின் - நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின்,;

150 - 51. [ பழுதின், றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கி :] ஈற்று ஆ விருப்பின் பழுதின்று போற்றுபு நோக்கி - ஈற்றுத்தொழிலையுடைய பசு தனது கன்றுக்குப் பால்சுரந்து கொடுக்கவேண்டுமென்னும் விருப்பம் போல நும்மிடத்து நிற்கின்ற மிடி இன்றாம்படி பேணிப்பார்த்து,;

151 - 2. நும் கையது கேளா அளவை - நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே,;

152. 5ஒய்யென - கடுக,;

153 - 4. பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் நீக்கி - கொட்டைப் பாசியினது வேர்போலே அழுக்கோடே குறைந்த தையலையுடைய துணிகளைப்போக்கி,;

154 - 5. தூய 6கொட்டை கரைய பட்டு உடை ந,ல்கி - தூயவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலேயுடைய பட்டாகிய உடைகளைத் தந்து,;


1 (பி-ம்.) ‘வெண்ணில்'

2 "கண்ணார்ந்த நலத்தாரை - கண்ணுக்கு நிறைந்த நலத்தையுடைய மகளிரை" (கலித். 60. 5, ந.)

3 இக்கவியைப் பொருநராற்றுப்படை உரையின் இறுதியிற் காண்க.;

4 நிழல் - அருள்; "புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை;" (பட். 204) என்ற அடியின் உரையில் நிழலென்பதற்கு அருளென்றே பொருளெழுதுவர் ; ந.;

5 "ஒய்யென - விரைய" முல்லை. 83. ந; கலித். 37 : 18, ந.;

6 "கொட்டையம் புரோசை - தலையில் மணிமுடியையுடைய புரோசைக் கயிற்றை" (சீவக. 1835, ந.)