| யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக் கூருளி பொருத வடுவாழ் நோன்குறட் டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் | 255 | ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல. வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக் கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள் | 260 | வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட் டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின் மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித் | 265 | துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட் டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பி னல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. |
"பானிலா வெண்கதிர்" (சிலப். 13 : 27); "தீம்பால் கதிர்மணிக் குடத்தினேந்தி, வீழ்தரச் சொரிவ தேபோல் விளங்கொளித் திங்கட் புத்தேள், சூழிருட் டொழுதி மூழ்கத் தீங்கதிர் சொரிந்து" (சீவக. 1541); "பானிலாவை" (தக்க. 605) 254 - 5."சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத், ததர் வீழ் பொடித்து" (மணி. 3 : 106 - 7) 260."பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில்", "பாண்டில் வையம்" (பெருங். 1. 36 : 32 ; 3 . 5 : 65) 263."அகிலுண விரிந்த வம்மென் கூந்தல்" (சிலப். 28 : 17); "அகிலுண விரிந்த கூந்த லாய்ச்சியர்,' (பாகவதம். 10. 19 : 18) 263 - 4. 14-5, ந. குறிப்புரையைப் பார்க்க. 267. கொய்தளிர்க்கண்ணி: "கொய்தார மார்பினெங் கோ", "கொய்தார மார்பிற் கொழுநன்" (பு. வெ. 95, 278) 268."நல்லிசை தம்வயி னிறுமார் வல்வேல், வான வரம்ப னன்னாட் டும்பர்" (அகநா. 389 : 15 - 6)
|