152

25 - 6. யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை-புதிதாகப் பூத்தலையுடைய கோங்கினது விளங்குகின்ற முகையை இகழ்ந்து மெல்லிய பணிகள் இடையிலே கிடக்கின்ற விருப்பத்தையுடைய முலையினையும்,

26 - 8. [முலையென, வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கினின்சே றிகுதரு மெயிற்றின்:] வள் கோள் பெண்ணை முலையென வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின் - பெரியகுலையினைனயுடைய பனை முலையென்னும்படி வளர்த்த நுங்கினது இனிய செறிந்த நீர் தன்னீர்மையாற் றாழும் எயிற்றினையும்,

28 - 30. [எயிறெனக், குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த, முல்லை சான்ற கற்பின்:] குல்லை அம் புறவில் குவி முகை எயிறென அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் - கஞ்சங்குல்லையையுடைய அழகிய காட்டகத்தே குவிந்த அரும்பு எயிறென்னும்படி நெகிழ்ந்த முல்லைசூடு தற்கமைந்த கற்பினையும்,

கற்பின் மிகுதிதோன்ற 1முல்லை சூடுதல் இயல்பு.

கதுப்பிற் கதுப்பென்பது (14) முதல் இத்துணையும் இயைபுத் தொடை திரிந்து வந்ததென்றறிக; "இறுவாயொன்றல்" (தொல். செய். சூ. 96) என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம்.

30 - 31. மெல்லியல் மடம் மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்-மெல்லிய இயல்பினையும், மடப்பத்தினையுடைய மான்போலும் பார்வையினையும், ஒளியையுடைத்தாகிய நுதலினையுமுடைய 2விறல்பட ஆடுமகளிர்,


1 "பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்" (சீவக. 624) என்பதற்கு, ‘முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டினாரென்க' என்றும்், முல்லைச்சூட்டு மிலைச்சி" (சீவக. 2438) என்பதற்கு, ‘முல்லைச்சூட்டைக் கற்பிற்கு மிலைச்சி' என்றும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையும், "வாணுத லரிவை முல்லை மலைய" (ஐங். 408), "முடிச்சூட்டு முல்லையோ முதற்கற்பு முல்லையோ" (தக்க. 119) "முல்லை யந்தொடை யருந்ததி" (பிரபு. கைலாய. 28), "முல்லைசான் மனையு லோபா முத்திரை" (சீகாளத்தி. பொன்முகரி. 21) என்பவையும் இக்கருத்தை வலியுறுத்தும். "வண்முல்லை சூடுவதே நலங் காண்குல மாதருக்கே" (குலோத். கோவை. 168)

2விறல்-சத்துவம்; வேம்புதின்றார்க்குத் தலை நடுங்குவதுபோல அஞ்சத்தக்கதுமுதலியவற்றைக் கேட்டவிடத்துப்பிறந்த உள்ள நிகழ்ச்சியால் தாமே தோன்றும் நடுக்கமுதலாயின.

"