153

கதுப்பினையும் (14) ஓதியினையும் (22) நுதலினையும் நோக்கினையும் (31) எயிற்றினையும் (28) முலையினையும் (26) குறங்கினையும் (20) அடியினையும் (18) சாயலினையும் (16) மெல்லிய இயல்பினையும் கற்பினையு (30) முடைய விறலியரென்க.

32 - 3. நடை மெலிந்து அசைஇய நல் மெல் சிறு அடி கல்லா இளையர் மெல்ல தைவர - நடையால் இளைத்து ஓய்ந்த நன்மையையுடைய மெல்லிய சிறிய அடியைத் 1தம்தொழிலையொழிய வேறு கல்லாத இளையர் மெத்தென்று வருட,

34 - 5. பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நாம்பின் இன் குரல் சிறு யாழ் இடம் வயின் தழீஇ - பொற்கம்பியினை யொத்த முறுக்கடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,

36 - 7. நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க - நட்டபாடையென்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலையாழை வாசித்தலைவல்ல பாணனாகியமகன் வாசிக்குமுறைமையை அறிந்து வாசிக்க,

38. இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ-வள்ளியோரின்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே பரிசில்தருவாரை விரும்பி,

இனி இயங்கும் வையம் சகடமாகலின், உலகத்திற்கு இயங்காவைய மென வெளிப்படை கூறிற்றுமாம்.

39. துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப - தன்னை வெறுத்தல் மிக்க வருத்தத்தோடே கூடின வறுமை நின்னைக் கொண்டுபோகையினாலே,

40. முனிவு இகந்து இருந்த முது வாய் இரவல-வழிவருத்தந் தீர்ந்திருந்த பேரறிவுவாய்த்தற்றொழிலை யுடையையாய இரவல,

துயர் ஆற்றுப்படுக்கையினாலே போந்து (39) விறலியர் தம்முடைய (31) சீறடியை (32) வெம்பரல் (8) அயிலுருப்பனையவாகிக் (7) கிழிக்கையினாலே (8) வரிநிழலசைஇப் (12) பின்னும் ஆற்றுந்தகைபெற ஐது நடந்து (7) அந்நடையால் இளைத்து ஓய்ந்த அடியை (32) இளையர் தைவரப் (33) பாண்மகன் (37) பாலையை (36) இயக்க (37) வள்ளி யோர் நசைஇச் (38) சீறியாழ் இடவயிற்றழீஇ (35) முனிவிகந்திருந்த இரவலவென முடிக்க.

41 - 2. கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை - கொழுவிய மீன் துணிய நடந்து வளவிய இதழை


1 "கல்லா விளைஞர்" (பொருந. 100) என்பதன் உரையில், ‘இனி, தத்தம் சிறுதொழிலன்றி வேறொன்றுங் கல்லாத இளைஞர்............என்றுமாம்' என்றெழுதிய பகுதியைக் காண்க.