159

னையும் 1கேட்டோர்க்கு விருப்பத்தைச் செய்யும் நன்றாகிய சொல்லினையு முடைய ஆயென்னும் வள்ளலும்,

99 - 101. மால்வரை கமழ் பூ சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீ கனி 2ஒளவைக்கு ஈந்த அதிகன் (103) - பெருமையையுடைய மலையிற் கமழும் பூக்களையுடைய பக்கமலையிலேநின்று அழகுபெற்ற கரு நெல்லியினது அமிழ்தின் தன்மை தன்னிடத்தேயுண்டான இனிய பழத்தைத் தான் நுகர்ந்து உடம்புபெறாதே ஒளவைக்குக் கொடுத்த அதிகன்,

102 - 3. உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் அரவம் கடல்தானை அதிகனும் - 3தன்னிடத்துறையும் கொற்றவையது வலியினையுடைய சினம் நின்றெரியும் ஒளிவிளங்கும் நெடிய வேலினையும் ஆரவாரத்தையுடைய கடல்போலும் படையினையுமுடைய அதிகமானென்னும் வள்ளலும்,

103 - 5. கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம் முட்டாது கொடுத்த நள்ளியும் (107)- தன்மனத்து நிகழ்கின்றனவற்றை மறையாது கூறி நட்புச் செய்தோர் மனமகிழும்படி அவர்கள் இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருள்களை நாடோறும் கொடுத்த நள்ளியும்,

105 - 7. முனை விளங்கு தட கை துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடு கோடு நளி மலைநாடன் நள்ளியும் - பகைப்புலத்தே கொலைத்தொழிலான் விளங்கும் பெருமையையுடைய கையினையும் துளியையுடைய மழை பருவம் பொய்யாது பெய்யும் உயர்ச்சியாற் காற்றுத்தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையு முடையவனாகிய நள்ளியென்னும் வள்ளலும்,

107 - 9. நளி சினை நறு போது கஞலிய நாகு முதிர் நாகத்து குறு பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த ஓரி (111) - செறிந்த கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருங்கின இளமையையுடைய முதிர்ந்த சுர


1 "கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாஞ் சொல்" (குறள், 643)

2ஒளவை அதிகமானிடத்து நெல்லிக்கனி பெற்றமையைப் பின் வருஞ் செய்யுளானு முணர்க: "வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார், களம்படக் கடந்த கழறொடித் தடக்கை, யார்கலி நறவி னதியர் கோமான், போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி, பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி, நீல மணிமிடற் றொருவன் போல, மன்னுக பெரும நீயே தொன்னிலைப், பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே" (புறநா. 91)

3 94-5-ஆம் அடியின் உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.