175
"யுடைய கோளாகிய மீன்கள் சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய ஞாயிற்றை இகழுந் தோற்றரவையுடைய விளங்குகின்ற பொற்கலத்திடத்தே,

விரும்புவன பேணி - நீ விரும்புவனவற்றை விரும்பியுட்கொண்டு,

245. ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி - நும்மிடத்து மிகு கின்ற விருப்பத்தாலே தான் நின்று உண்ணப்பண்ணி,

ஆனாமரபினென்றும் பாடம்.

நீ சிலமொழியாவளவை (235) விரும்புவன பேணி (244) உடீஇ (236) நல்கி (237) அடிசிலைக் (241) கலத்தேயிட்டுத் (244) தான் நின்று ஊட்டி யென்க.

246. திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி - வலி யமைந்த வெற்றியோடே பகையைத் தத்தம் நிலத்தைக் கைவிட்டுப் போகப்பண்ணி,

247. விறல் மேல் மன்னர் மன் எயில் முருக்கி - வெற்றியையுடைத் தாகிய வேலினையுடைய முடிவேந்தர்மன்னும் அரண்களை யழித்து,

248. நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின் - அவ்விடங்களிற் பெற்ற பொருளாலே விரும்பிவந்தவர் புன்கண்மையையும் பாணர் புன்கண்மை யையும் போக்கினபின்பு,

249. வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு - தன்படைத்தலைவர் மிக்கனவாய்க் கொண்டுவந்து தந்த நன்றாகிய நிறத்தினையுடைய பொருட்டிரளுடனே,

தன்படைத்தலைவர், குறுநிலமன்னரையும் அரசரையுமழித்து நயவர்க்கும் பாணர்க்குங்கொடுத்து மிக்குக்கொண்டுவந்த நிதியமென்க.

250 - 51. [பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி, யுருவ வான்மதி யூர்கொண் டாங்கு:] பருவ வானத்து உருவ வான் மதி பால் கதிர் பரப்பி ஊர்கொண்டாங்கு - 1 கூதிர்க்காலத்தையுடைய வானிடத்தே வடிவுநிறை தலையுடைய வெள்ளிய மதி பால்போலுங்கிரணங்களைப் பரப்பிப் பரத்தலைக் கொண்டாற்போல,

252 - 3. கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறடு ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு - கூரிய சிற்றுளிகள் சென்று செத்தின உருக்களழுந்தின வலியினையுடைய குறட்டிடத்திற்றைத்த ஆர்களைச் சூழ்ந்த சூட்டினையுடைய உருளையோடே,


1 கூதிர்க்காலத்து மதி சாலவிளங்குமென்பது, "இரவுநன் பகலு மாறி யிரவியு மதியு மாறி, வருவனவென்ன வெய்யோனொளிமிக மழுங்கிச் செல்லப், பரவுபைங் கிரணக் கற்றைப் பானிலாச் சாலக் கான்று, விரவிய மாந்தர்க் கின்பம் விளைத்தது பனிவெண் டிங்கள்" (காஞ்சிப். கழுவாய். 180) என்பதனால் விளங்கும்.