| குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி | 200 | யிணைத்த கோதை யணைத்த கூந்தன் முடித்த குல்லை யிலையுடை நறும்பூச் செங்கான் மரா அத்த வாலிண ரிடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ | 205 | மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு |
199. "குண்டுசுனைக் குவளையொடு" (குறுந். 59 : 2) "குண்டுசுனைபூத்த வண்டுபடு கண்ணி, நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ யென்பன, பூத்தபூவான் இயன்ற கண்ணி, நூலாத நூலான் இயன்ற கலிங்கமென ஒற்றுமை நயம் பற்றிச் செயப்படுபொருண்மேல்நின்றன" (தொல். வினை. சூ. 37, ந.); இவ்வடி, பெயரெச்சம், செய்வதாதி அறுபொருட் பெயரன்றிப் பிற பெயர் எஞ்ச நின்றதற்கு மேற்கோள்; (நன். வி. சூ. 340), "நுண்டுகில், குண்டு ............. கண்ணி என்றாற் போல ஒற்றுமை நயம்பற்றி, நுண்ணிய நூலாற் செய்த துகிலென்று கொள்க" (தஞ்சை. 217, உரை) 200. "இணைப்புறு பிணையல்" (முருகு. 30) 202. ""செங்கான் மராஅத்து" (நற். 148 : 5, ஐங். 381 : 2) வாலிணர்: "மராத்து வாஅன் மெல்லிணர்" (அகநா. 127 : 13); "மராஅத்து ........... வலஞ்சுரி வாலிணர்" (ஐங். 383 : 2-3) 203. "சுரும்புண விரிந்த பெருந்தண்கோதை" (அகநா. 131 : 4) 201-4. "பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல்" (நற். 8 : 2); "தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும், வண்ணவண் டோன்றியும் வயங்கிணர்க் கொன்றையு, மன்னவை பிறவும் பன்மலர் துதையத், தழையுங் கோதையு மிழையு மென்றிவை, தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடு, மடமொழி யாயத்தவர்" (கலித். 102 : 2-7); "அம்பூந் தொடலை யணித்தழை யல்குற், செம்பொறிச் சிலம்பி னிளையோள்" (புறநா. 341 : 2-3); "அந்தழை யல்குலும்" (பு. வெ. 123) 205. மயில் கண்டன்ன மடநடை: "மடநடை மஞ்ஞை" (முருகு. 310); "பீலி மஞ்ஞையி னியலி" (பெரும்பாண். 331); "நன்மா மயிலின் மென்மெல வியலி" (மதுரைக். 608); "அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியை" (ஐங். 258 : 2); "மணிமயிற்றொழில்" (பரி. "வானாரெழிலி" 62); "வருநல மயிலன மடநடை மலைமகள்" (தே. இடைமருது.); "மயிலெனப் பேர்ந்து" (திருச்சிற். 224); "நடை மயிலே" (பிரயோக. 42) "மயில் ......... மகளிர்", "கண்டன்ன" (இ. கொ. சூ. 86, 117, மேற்.)
|