274

இதனானே முல்லைக்குரிய 1காரும் மாலையுங் கூறினார்.
மால்போல (3) எழுந்த எழிலி (5) பொழிந்த மாலையென்க.

7. [அருங்கடி மூதூர் மருங்கிற் போகி :] அரு கடி முது ஊர் மருங்கில் நல்லோர் (18) போகி-அரியகாவலையுடைய பழைய ஊர்ப் பக்கத்துப் பாக்கத்தே படைத்தலைவரேவலால் நற்சொற்கோடற்குரியோர் போய்,

8-11. [யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை, யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது, 2பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப:] 

நறு வீ முல்லை (9) அரும்பு (10) யாழ் இசை இனம் வண்டு ஆர்ப்ப (8) அவிழ் அலரி (10) நாழிகொண்ட (9) நெல்லொடு (8) தூஉய் (10)- நறியபூக்களையுடைய முல்லையினது அரும்புகள் யாழினது ஓசையினையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை நாழியிடத்தே கொண்டுபோன நெல்லுடனேதூவி,

கைதொழுது (10) விரிச்சி நிற்ப (11)-தெய்வத்தை வணங்கி நற் சொற்கேட்டு நிற்க,

நல்லோர் (18) போகித் (7) தூஉய்த் தொழுது (10)நிற்பவென்க.

என்றது : 3ஒரு வேந்தன் ஒரு வேந்தனோடு இகல்கருதினாற் போர் செய்ய வேண்டுதலின், அவனாட்டந்தணர் முதலியோரைத் தன்னாட்டின் கண்ணே அழைத்தற்கும், அதனையறியாத ஆவைக் கொண்டுபோந்து தான் காத்தற்குமாகத் தன் படைத்தலைவரை நோக்கி அரசன் நிரை யடித்தற்கேவியவழி, அவர் அவனூரினின்றும் போய் ஒரு பாக்கத்து


1"காரு மாலையு முல்லை குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்" (தொல். அகத். சூ. 6)

2பெருமுதுபெண்டிரென்பதற்கு ஒரு பிரதியிலும் உரையிலது ; பெரிய முதிர்ந்த பெண்டிரென்க.

3"இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர், ஒருவர் நாட்டுவாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத்தகாதசாதிகளை ஆண்டுநின்றும் அகற்றல்வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாமென்றதற்கு ‘ஆதந்தோம்பல்' என்றான்; அஃது, ‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் ................... எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென, வறத்தாறு நுவலும் பூட்கை மரத்தின்' (புறநா. 9:1-6) எனச் சான்றோர் கூறிய வாற்றானுணர்க" (தொல். புறத். சூ. 2, ந.) என்று இவ்வுரையாசிரியர் எழுதியுள்ளவற்றால் இங்கே கூறப்படும் வழக்கு விளங்கும்.