அதனால் (17)-அவள் கூறிய நற்சொல்லின் கருத்தால், 18-20. [தெவ்வர், முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து, வருத றலைவர் வாய்வது :] தலைவர் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல் வாய்வது-நம் தலைவர் வஞ்சிசூடிச் சென்று பகைவர் மண்ணைக்கொண்டு பின் அவரிடத்தே வாங்கிக்கெண்ட திறையினையுமுடையராய் இங்ஙனந் தாமெடுத்துக் கொண்ட வினையை முடித்து வருவாரென்று நாம் கருதிய தன்மையிலே அவர்நிற்றல் உண்மை ; நல்ல (18)-அவர் அங்ஙனம் வினைமுடித்துவருதல் நமக்கு இல்லறம் நிகழ்தற்குக் காரணமாகலின் நல்ல காரியம் ; 20-21. [நீ நின், பருவர லெவ்வங் களைமா யோயென :] மாயோய் நீ நின் பருவரல் எவ்வம் களை என -1மாமை நிறத்தையுடையோளே நீ நின் மனத்தடுமாற்றத்தான் உளதான வருத்தத்தைப் போக்கென்று கூற, அது கேட்டு, செலவுக்குறிப்பறிந்து வேறுபட்டதுணர்ந்தமையின், மனத்தடு மாற்றமென்றார். பெருமுதுபெண்டிர் (11), நல்லோர் (18) போகித் (7) தூஉய்த் தொழுது (10) விரிச்சிநிற்ப (11) அவர்கேட்ட நன்னர் (17) வாய்ப்புள் (18) ஆய் மகள் (13) கையளாகிக் (14) கன்றின் (12) அலமரனோக்கித் (13) தாயர் இன்னே வருகுவரென்போளுடைய (16) நன்மொழியாகயாங்கள் கேட்டனம் ; அதன் கருத்தால் (17) தலைவர் வருதல் வாய்வது (20) ; நல்லகாரியம் (18); மாயோய் (21), நீ நின் (20) பருவரலெவ்வம்களையென்று கூற (21) அது கேட்டு நீடு நினைந்து (82) என்க. இங்ஙனம் பொருள்கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுதுபெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது ; நின்னெவ்வங் களையென்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து (80) புலம்பொடு (81) தேற்றியும் திருத்தியும் (82) மையல்கொண்டும் உயிர்த்தும் (83) நடுங்கியநெகிழ்ந்து (84) கிடந்தோள் (88) எனப் பொருள் கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற்பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற்பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியானென்பதூஉம், அவன் குறித்தகாலங்கடந்தால் தலைவிக்கு வருத்தமிகுமென்பதூஉம், அது பாலையாமென்
1மாமைநிறம் : நாருரித்த ஆம்பற்றண்டுபோன்ற அழகிய நிறம் ; "நீர்வள ராம்பற் றூம்புடைத் திரள்கா, னாருரித் தன்ன மதனின் மாமை" (நற். 6 : 1-2) ; "பொய்கை யாம்ப னாருரி மென்கால், நிறத்தினு நிழற்றுதன் மன்னே, இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே" (ஐங், 35 : 2-4) ; இது மாமைக்கவினென்றும் வழங்கும்.
|