279

கல் தோய்த்து உடுத்த படிவம் பார்ப்பான் (37) முக்கோல் அசை நிலை கடுப்ப (38)-துகிலைக் காவிக்கல்லைத் தோய்த்துடுத்த விரதங்களையுடைய முக்கோலந்தணன் அம்முக்கோலிலே அந்த உடையினை இட்டு வைத்த தன்மையையொக்க,

நல் போர் (38) ஓடா வல் வில் தூணி நாற்றி (39)-அறத்தாற் பொருகின்ற போரில் ஓடாமைக்குக் காரணமான வலியவில்லைச் சேரவூன்றி அதிலே தூணிகளைத் தூக்கி,

41. பூ தலை குந்தம் குத்தி-பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறிகோல்களையும் ஊன்றிபூந்தலை :விகாரம்.

கிடுகு நிரைத்து-கிடுகுகளையும் நிரையாகக் குத்தி,

42. வாங்கு வில் அரணம் அரணம் ஆக-இங்ஙனஞ்சூழும் விற்படையாகிய அரணே தங்களுக்கு அரணாக, இதற்குள்ளே 1விட்ட,

கயிறு வாங்கிருக்கைக்கண்ணே (40) நாற்றிக் (39) குத்தி நிரைத்து (41)வாங்குவில்லரண மென்க.

43. 2 வேறு பல் பெரு படை நாப்பண்-பாடைவேறுபட்ட பலவாகிய பெரிய படைக்குநடுவே,

43-4. [வேறோர், நெடுங்காழ்க் கண்டங் கோலியக நேர்பு :]வேறு ஓர் அகம் நேர்பு-வேறோரிடத்தை அரசனுக்குக் கோயிலாக எல்லாருமுடம்பட்டு,

நெடு காழ் கண்டம் கோலி-நெடிய குத்துக்கோலுடனே பண்ணின பல நிறத்தாற் கூறுபட்ட 3மதிட்டிரையை வளைத்து,

கண்டம் : ஆகுபெயர்.

45. குறு தொடி முன் கை கூந்தல் அம் சிறு புறத்து மங்கையர் (47)- குறியதொடியையுடைய முன்கையினையும் கூந்தலசைந்துகிடக்கின்ற அழகினையுடைய சிறிய முதுகினையுமுடைய மங்கையர்,

46-7. இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் - இராப்பொழுதைப் பகற்பொழுதாக்கும் திண்


1விட்ட-தாங்கிய : மதுரைக். 125-7. உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க,

2 "பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில, மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை' (புறநா. 62 : 10-11) என்ற பகுதியும், ‘பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண்பாடைமாக்களாகிய படைத்தொகுதி இடமில்லையாம்படி தொக்க அகன்ற இடத்தையுடைய பாடிவீடு' என்ற அதனுரையும் இங்கே அறிதற்குரியன. "விரவு மொழிக்கட்டூர்" (அகநா. 212 :14 ; பதிற். 90. 30)

3மதிட்டிரை கண்டத்திரையெனவும் பல்வண்ணத்திரையெனவும் வழங்கும் ; சீவக ; 647, ந ; 873.