287

தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தாரென்றுணர்க. இவ்வாறன்றி ஏனையோர் கூறும்பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமையுணர்க.

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டிற்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.

11வண்டடைந்த கண்ணி வளராய்ச்சி வாணெடுங்கண்
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ - தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் 2கனிவிளவின் காயுகுத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை.
23புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
துனையுந் துனைபடைத் துன்னார்-முனையுள் 
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
கடன்முகந்து வந்தன்று கார்.

1(பி-ம்.) ‘வண்டடை கண்ணி'

2. "மலர்க்குறிஞ்சி, முதற்கேற்றவடை ; ‘கனிவிளவின்காய்' போல" (சிலப். 14:86-97. அடியார்.)

3.இச்செய்யுள், புறப்பொருள் வெண்பாமாலையில், கார்முல்லை (276) என்னுந்துறைக்குக் காட்டிய வெண்பா.