1 - திருமுருகாற்றுப்படை போல மயிலிற் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின் வண்ணவுவமமும் கொள்ளக்கிடந்தமை காண்க. 3. [ ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:] 1ஓ அற இமைக்கும் அவிர் ஒளி - இருவகையிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்று தங்குதல் இல்லையாக இமைத்துப் பார்ப்பதற்குக் காரணமாகும், விளங்குகின்ற ஒளி. ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல் - கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது2 "நுதல திமையா நாட்டம்" என்பதனாலுணர்க. சேண் விளங்கு ஒளி - கட்புலனால் நோக்குவார் கண்ணிடங்களெல்லாவற்றினும் சென்று விளங்குகின்ற ஒளியினையும், உவப்ப எழுந்து திரியும் (1) ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு (2) அவிர்கின்ற ஒளி (3) யெனத்தொழிலுவமம் கொள்ளுங்கால் வினை முடிக்க. உவப்ப எழுந்து திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண் விளங்கொளியென வண்ணவுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க. 4. உறுநர் தாங்கிய3 மதன் உடை நோன்றாள் - தன்னைச் சேர்ந்தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத் தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும், 5. செறுநர் தேய்த்த 4செல் உறழ் தட கை - அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும் உடைய, 6. மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன்-5மறக்கற்பில்லாத 1 ஓவற - ஒழிவற. இமைக்கும் - விட்டுவிளங்கும். அவிர்தல் - பாடஞ் செய்தல் (வேறுரை) 2அகநா. கடவுள். 4. 3மதனுடை - அழகுடைய (வேறுரை) 4செல் உறழ் - மேகத்தை ஒத்த (வேறுரை) 5 மறக்கற்பு அறக்கற்பு ; மறக்கற்பு சீறிய கற்பென்றும் கொடுங்கற்பென்றும், அறக்கற்பு ஆறிய கற்பென்றும் அருட்கற்பென்றும் வழங்கப்பெறும்; ‘வருத்தமில்லாத அருட்கற்பினையுடைய தெய்வ யானையார்' (முருகு, 175, ந.); "ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை, வண்டார் கூந்த லொண்டொடி கணவ" (பதிற். 90 : 49-50); ‘வீரபத்தினி மறக்கற்புடையாள்; கோப்பெருந்தேவி அறக்கற்புடையாள்; ஆக ஆறியகற்பும் சீறியகற்புமெனக் கற்பு இருவகை' (சிலப். பதிகம், 38-54, அடியார்.); "கொந்தளக மலர்சரியக் கூப்பிடுவாள் கொடுங்கற்பும்", (வி. பா. சூதுபோர். 253)
|