186-7. அவர் நாடு அழிய எயில் வௌவி-அவருடைய நாடுகளழியும்படியாக அவரிருக்கின்ற மதிலைக்கொண்டு, 188. சுற்றமொடு தூ அறுத்தலின்-அலர்களுக்கு உதவிசெய்யும் சுற்றத்தாரோடே கூட அவர்கள் வலியைப் போக்குதலாலே, 189. செற்ற தெவ்வர் நின்பழி நடப்ப-நின்னாற் சிறிதுசெறப்பட்ட பகைவர் நின் ஏவல்கேட்டு நடக்கையினாலே, 190. வியல் கண் முது பொழில் மண்டிலம் முற்றி-அகலத்தை இடத்தேயுடைய பழைய நாவலந்தீவின்கணுளவாகிய சோழமண்டலம், தொண்டைமண்டல மென்கின்ற மண்டலங்களை நின்னவாக வளைத்துக் கொண்டு, மண்டலம் மண்டிலமென மருவிற்று. 191. அரசு இயல் பிழையாது-நூல்களிற் கூறிய அரசிலக்கணத்தில் தப்பாமல், 191-2. [அறநெறி காட்டிப், பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது :] பெரியோர் சென்ற அடி விழி பிழையாது அறம் நெறி காட்டி-நின்குலத்திற் பெரியோர்நடந்த அடிப்பாட்டின்வழியைத் தப்பாமல் அறநெறியிருக்கும்படி இதுவென்று அவர்களுக்கு விளக்கி, நனிபுகன்றுறைதுமென்னாது ஏற்றெழுந்து (147) களிறுபரப்பித் (179) தானையோடே (180) தலைச்சென்று (181) அரசமண்டிலமுற்றிச் (190) செற்றதெவ்வர் நின்வழிநடக்கையினாலே (189) நீ நட்டவர் குடியை யுயர்க்குவை (131) யாகையினாலே அவர்களுக்கு அறநெறி காட்டிப் (191) பின்னர் அம்மண்டலங்களைச் சூழவிருந்த குறுநிலமன்னர் அரண்களி லுள்ளனவற்றை எளிதிற்கொண்டு (145) வீசிப் (146) போகிப் (148) புக்கு அவரருப்பங்களை வௌவிப் (149) பின்னர் உறுசெறுநர் (152) நின்வழி வாழாமையினாலே (175) அவர்புலம் புக்கு (152) நீநரை யுருமே றனையை (63) யாகையினாலே அரசியல் பிழையாமல் (191) ஆரப்பிமிழ (182) நீறுகைப்ப (184) நரல ஆர்ப்பக் (185) கணைசிதறித் (183) தொலைச்சி (153) அவரைக்கடந்து அட்டு (186) அவரெயிலை வௌவி (187) அவரைத் தூவறுத்தலின் (188) அப்பகைவர்தேஎம் (176) எரிமேயக் (155) காடாக (156) மா சேப்பப் (157) பாழாக (158) மறப்ப (160) ஆட (163) அகவச் (166) சேர (168) முரல (170) ஊர்தர (172) உகளக் (174) கெட்டுப் (175) பாழாயின (176) அங்ஙனம் பாழாயின பின்பு நீ செற்றவரரசு பெயர்க்குவை (132) யாகையினாலே வேண்டுபுலத்திறுத்து (150) அந்நாடுகள் மேம்படுதற்குமருவின் குருசில் (151) என வினை முடிக்க. 193-4.[குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின், வழி வழிச் சிறக்கநின் வலப்படு கொற்றம் :] குடமுதல் தோன்றிய தொன்று
|