நின்னென்றது சீவான்மாவை. முன்னிலை : ஆகுபெயர். 207-8. [கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல், கேட்டிசின் வாழி கெடுகநின் னவலம் :] நின் அவலம் கெடுக-நின்னிடத்துண்டாகிய மாயை இனிக்கெடுவதாக ; அடு போர் அண்ணல்-அம்மாயையைக்கொல்கின்ற போர்த்தொழில் வல்ல தலைவனே, கொன் ஒன்று கிளக்குவல்-பெரிதாயிருப்பதொரு பொருளை யான் கூறுவன்; அஃது; என்னாற் 1காட்டுதற்கரிது; என்றது 2கந்தழியினை. கேட்சின்-அதனைத் 3தொல்லாணை நல்லாசிரியரிடத்தே கேட்பாயாக; வாழியென்பதனைச் சுற்றமொடு விளங்கி (770) என்பதன்பின்னே கூட்டுக. 209. [கெடாது நிலைஇயர்நின் 4சேண்விளங்கு நல்லிசை :] சேண்விளங்கு நின் நல் இசை கெடாது நிலைஇயர்-சேட்புலமெல்லாம்ம சென்று விளங்கும் நின்னுடைய நல்லபுகழ் ஒருகாலமும் கெடாதே நிலைபெறுவதாக; 210-16. [தவாப்பெருக்கத் தறாயாண, ரழித்தானாக் கொழுந்திற்றி, யிழிந்தானாப் பலசொன்றி, யுண்டானாக் கூர்நறவிற், றின்றான வினவைக, னிலனொடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப், பயின்ற வறியா வளங்கெழு திருநகர் :] தவா பெருக்கத்து அறா யாணர் (210) வளம் கெழு திருநகர் (216)-கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயாலே செல்வம் பொருந்தின திருமகளையுடைய நகர், அழித்து ஆனா கொழு திற்றி (211) தின்று (214)-அழிக்கப்பட்டு விருப்பு அமையாத கொழுவிய தசையைத்தின்று, "ஆடழிக்க" என்ப. ஆனா பல சொன்றி இழித்து (212) ஆனா கூர் நறவின் உண்டு (213)-விருப்பமையாத பலவகைப்பட்ட சோற்றைத் தீதென்றுகூறிக் களிப்பமையாத மிக்க கள்ளை உண்டு,
1 கிளக்குவலென்றமையாற் காட்டுதற்கரிது என்றார். 2 கந்தழியைப்பற்றிய செய்தியைத் திருமுருகாற்றுப்படை யுரையின் இறுதிப் பகுதியாலறிந்து கொள்ளலாம். 3 மதுரைக். 761 ; பட்டினப். 170. 4 "சேணார் நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற். 88:36) ; "வீண் பொருபுகழ்" (புறநா. 11:6) ; "வானேற நீண்ட புகழான்" (சீவக. 6)
|