37

1 - திருமுருகாற்றுப்படை

20. துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி - ஆயத்தார் நன்றென்று ஆராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே, 

21-2. [செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு, பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி:] செங்கால் வெட்சி சிறு இதழ் இடை பைந்தாள் குவளை தூ இதழ் கிள்ளி இடுபு - சிவந்தகாலையுடைய வெட்சியுடைய சிறிய பூக்களை 1விடுபூவாகத் தூவி அதற்கு நடுவே பசுத்த தண்டினையுடைய குவளையினது தூய இதழ்களைக் கிள்ளியிட்டு, 

23. தெய்வவுத்தியொடு2வலம்புரி வயின் வைத்து-3சீதேவியென்னும் தலைக்கோலத்துடனே வலம்புரிவடிவாகச் செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைத்து, 

24-5. 4திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து - திலகமிட்ட மணநாறுகின்ற அழகினையுடைய நெற்றியின்கண்ணே சுறாவினது அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கப்பண்ணி, 

மகரப்பகுவாய்: ஆகுபெயர். மண்ணுறுத்தலை, "ஆவுதி மண்ணி" (மதுரைக். 494) என்றாற்போலக் கொள்க. இனி மண்ணுறுத்துத் துவர முடித்தவென மேலேகூட்டி, கழுவி முடித்தவென்றுமாம்.

26-7. துவர முடித்த துகள் அறும் முச்சி பெரு தண் சண்பகம் செரீஇ - வேண்டுவன கூட்டி முற்றமுடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி

27-8. கரு தகடு5உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி - கரிய புறவிதழினையும் மேலில் துய்யினையுமுடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மேலேயிட்டு, 

இது6முதலாகிய பொருட்கேற்ற அடையடுத்து நின்றது. 

23-30. கிளை கவின்று எழுதரு கீழ்நீர் செவ்வரும்பு இணைப்பு உறு பிணையல் வளைஇ - பச்சென்ற அரும்புகளினின்றும் மேலே போந்து. 


1விடுபூ - கட்டாத பூ; பூக்கள் விடுபூ, தொடைப்பூ, கட்டுப்பூவென, மூவகைப்படுமென்பர்;சிலப்.5:14, அடியார்.

2வலம்புரி - வலம்புரிச்சங்கீன்ற முத்தின்மாலை ; நந்தியாவட்டப்பூ (வேறுரை)

3"செந்திருவுத் திங்களும் பூவுந் தலைசிறப்ப" (தண்டி. 33, மேற்.)

4பொட்டு ஊன்றின (வேறுரை)

5 உளைப்பூ - விரிந்தபூ (வேறுரை). "உளைப்பூ மருதத்து" (ஐங். 7) 

6 முதலென்றது மருதமரத்தை; அடையென்றது உளைப்பூ வென்றதனை.