453-5. [நீரு நிலனுந் தீயும் வாளியு, மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவா ணெடியோன் றலைவ னாக :] மாகம் 1விசும்பொடு வளியும் தீயும் நீரும் நிலனும் ஐந்து உடன் இயற்றிய 2மழு வாள் நெடியோன் தலைவன்ஆக-திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளையுடைய பெரியோன் ஏனையோரின் முதல்வனாகக்கொண்டு, 456. மாசு அற விளங்கிய யாக்கையர்-3தீர்த்தமாடிய வடிவினையுடையராய், 456-8. 4சூழ் சுடர் வாடா பூவின் 5இமையா நாட்டத்து 6நாற்றம் உணவின் உரு கெழு பெரியோர்க்கு-தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையுமுடைய அச்சம்பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு, 459. மாற்றரு மரபின் உயர் பலி கொடுமார்-விலக்குதற்கரிய முறைமையினையுமுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு, 460. அந்தி விழவில்-7அந்திக்காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே, தூரியம் கறங்க-வாச்சியங்கள் ஒலிப்ப, செல்வர் (442) மாசறவிளங்கிய (யாக்கையராய்க் (456) கமழ (447) மறைய (452) நெடியோன் தலைவனாகப் (455) பெரியோர்க்குப் (458) பலி கொடுக்கைக்கு (459) அந்தியிற்கொண்ட விழவிலே தூரியங்கறங்க வென்க. 461-5. [திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை, யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித், தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத், தாமு மவரு மோராங்கு விளங்கக், காமர் கவினிய பேரிளம்பெண்டிர் :]
1 "நிலந்நீ நீர்வளி விசும்போட டைந்தும்" (தொல். மரபு. சூ. 89) 2 மழுவாணெடியோனென்றது சிவபிரானை ; இக்கருத்தை, "ஏற்றுவல னுயரிய " (புறநா. 56.) என்னும் செய்யுள் வலியுறுத்தும். 3 "மாசற விமைக்கு முருவினர்" (முருகு. 128) என்பதற்கு ‘எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையர்' என்றுரையெழுதினார் முன். 4 (பி-ம்.) ‘தூசுடை' 5 "இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்" என்றார் முன் ; முருகு. 3, ந. 6 (பி-ம்.) ‘கொற்றவுணவின்' 7 இதனை அந்திக்காப்பென்பர்.
|