39

1 - திருமுருகாற்றுப்படை

42.1மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து - மரமேறுதற் றொழிலிற் சிறப்பையுடைய மந்திகளும் மரங்களின் நீட்டத்தால் ஏறியறியாத மரம்நெருங்கின பக்கமலையிடத்து நின்ற,

உம்மை : சிறப்பும்மை.

43-4. சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் பெரு தண்2கண்ணி மிலைந்த சென்னியன் - தான் விரும்புதலிற் சுரும்பினமும் மொய்யாத நெருப்புப்போலும் பூவினையுடைய செங்காந்தளினது பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன்;

அடியினையும் (13) காலினையும் நுசுப்பினையும் தோளினையும் (14) துகிலினையும் (15) அல்குலினையும் (16) வனப்பினையும் (17) இழையினையும் (18) மேனியினையும் (19) உடைய சூரரமகளிர் (41) பலருங்கூடி (39) இடையிட்டு (21) வைத்துத் (23) தாழப்பண்ணிச் (25) செரீஇ (27) இணரட்டி (28) வளைஇத் (30) திளையாநிற்கக் (32) கொட்டி (35) அப்பித் (36) தெறித்து (37) ஏத்திப் (39) பாடி (40) ஆடுஞ்சோலையையுடைய (41) வெற்பில் (12) அடுக்கத்துக் (42) காந்தட் கண்ணி மிலைந்த சென்னியனென முடிக்க.

இதனான்3டையாளப்பூக் கூறினார். இது, "வெறியாட் டயர்ந்த காந்தளும்" (தொல். புறத். சூ. 5) என்பதனாலுணர்க.

"அகன்றபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு, மியன்று பொருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" (தொல். செய். சூ. 211) என்னும்4மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள் பத்தும் செய்தார்களாதலின் இவ்வாறே மாட்டிமுடித்தல் யாண்டும் வருமென்றுணர்க. 

45. பார் என்பதுமுதற் சேய் (61) என்னுந்துணையும் ஒரு தொடர்.

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு - பாராகிய நிலம் முற்றுப் பெற்ற குளிர்ச்சியையுடைய கடல் தன் நிலை குலையும்படி உள்ளேசென்று. 


1மந்தி - அருக்கன் (வேறுரை)

2கண்ணி - சூடும்பூவென்றும் வழங்கும் ; சீவக. 208,

3அடையாளப்பூ - ஒருவர்க்கே உரிய பூ. கொன்றைமாலையைச் சிவபெருமானுடைய அடையாளப்பூ வென்பர்; சீவக. 208,

4"அகன்றுவந்த மாட்டு முறுகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க : மொழிமாற்றாவது கேட்டோர் கூட்டியுணருமாற்றான் ஈர டிக்கண்ணே வருவதென்றும், மாட்டென்னுமுறுப்பாவது இரண்டிறந்த பலவடிக்கண்ணும் பல செய்யுட்டொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வருமென்றுணர்க" (தொல். எச்ச. சூ. 13, .)