390

திண் கதிர் மதாணி (461) காமர் கவினிய பெரு இள பெண்டிர் (465)-திண்ணி ஒளியினையுடைய பேரணிகலங்களையுடையராய் விருப்பம் அழகுபெற்ற1பெரிய இளமையினையுடைய பெண்டிர்.

தாம் முயங்கி புணர்ந்து ஓம்பினர் தழீஇ-(462)-தாம் முயங்கு தலைச்செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு,

2தாது அணி தாமரை போது பிடித்தாங்கு (463) ஒள் குறு மாக்களை (461) தழீஇ (462)-தாதுசேர்ந்த செவ்வித்தாமரைப்பூவைப் பிடித்தாற் போல் ஒள்ளிய சிறுபிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு,

தாமும் அவரும் ஓராங்கு விளங்க (464)-தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாக,

466-7. [பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச், சிறந்து :] பூவினர் புகையினர் தொழுவனர் சிறந்து பழிச்சி-பூசைக்குவேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்து,

467. புறங்காக்கும் கடவுள் பள்ளியும்-பாதுகாத்து நடத்தும் பௌத்தப் பள்ளியும்,

468. சிறந்த வேதம் விளங்க பாடி அதர்வவேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட 3வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும்படியோதி,

அதர்வம் 4தலையாயவோத்தன்மை 5பொருளிற்கூறினாம்.


1 பேரிளம்பெண்பருவமென்பது மகளிருடைய பேதைப்பருவம் முதலிய ஏழுபருவங்களுளொன்று.

2 (பி-ம்.) ‘தாதவிழ்'

3 வேதங்கள் மூன்றே யென்பதும் அதர்வவேதம் மந்திரசாகை யென்பதும் இங்கே அறியற்பாலன ; "மும்முறை யாலும் வணங்கப்படுகின்ற முக்கணக்கன்" (பொன்வண்ணத். 87) என்பதும், "த்ரிவேத போத காரணன்" (தக்க. 380) என்பதும், அதன் உரையாசிரியர் அதற்கு, ‘திரிவேதமென்றது : மூற்றேவேதம் ; நாலாவது மந்திரசாகையான அதர்வவேதம் ; திரைவேதா என்பது ஹலாயுதம்'என்றெழுதிய

விசேட உரையும் இங்கே உணரத்தக்கவை.

4 "இருக்கும் யசுரும் சாமமும் : இவைதலையாய ஓத்து. இவைவேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வம் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வமும் ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று" (தொல். புறத். சூ. 20, ந.)

5 (பி-ம்.) ‘பொருளியலில்'