534. கீழ் செல 1வீழ்ந்த கிழங்கொடு-பார் அளவாகவீழ்ந்த கிழங்குடனே, 534-5. [பிறவு, மின்சோறு தருநர் பல்வயி னுகர :] பல் வயின் நுகர இன் சோறு பிறவும் தருநர்-பலவிடங்களிலும் அநுபவிக்க இனிய பாற்சோறு பால் முதலியவற்றையுங் கொண்டுவந்து இடுவாரிடத்து எழுந்த ஓசையும், என்றது, சோறிடுஞ்சாலைகளை. 536-44. வாலிதை யெடுத்த வளிதரு வங்கம், பல்வேறு பண்டமிழிதரும் பட்டினத், தொல்லெ னிமிழிசை மானக் கல்லென, நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப், பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரையோத, மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந், துருகெழு பானாள் வருவன பெயர்தலிற், பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே, யல்லங்காடி யழிதரு கம்பலை :] நன தலை வினைஞர் கலம் கொண்டு மறுக (539)-அகன்ற இடத்தையுடைய தேசங்களில் வாணிகர் ஈண்டுச்செய்த பேரணிகலங்களைக் கொண்டுபோதல் காரணமாக, வால் இதை எடுத்த வளி தரு வங்கம் (536)-நன்றாகிய பாய்விரித்த காற்றுக்கொண்டு வருகின்ற மரக்கலம், பெரு கடல் குட்டத்து புலவு திரை ஓதம் (540) இரு கழி மருவிய பாயபெரிது எழுந்து (541) உரு கெழு பால்நாள் வருவன (542)-பெரிய கடல்சூழ்ந்த இடத்தினின்றும் புலானாறுந் திரையையுடைய ஓதம் கரிய கழியிற் புகார்முகத்தேயேறிப் பரக்கின்ற அளவிலே மிக்கெழுந்து அச்சம்பொருந்திய நடுவியாமத்தே வருகின்றவற்றின் பண்டம் (537) என்க. 2 பெரிதெழுந்தென்றார், பாயும்வாங்கிச் சரக்கும்பறியாமல் வருகின்றமை தோன்ற ஓதமருவிப்பாயவென்றார், அவ்வோதவேற்றத்திலே கழியிலே வருமென்பதுணர்த்தற்கு. பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து (537) ஒல்லென் இமிழ் இசை மான (538)-வங்கம்வருகின்றவற்றிற் பலவாய் வேறுபட்ட
1 வீழ்ந்த-கீழே வளர்ந்த ; "வீழ்ந்தன-கீழே வளர்ந்தன" (மலைபடு. 128, ந.); "வீழ்க்கும்மே-தாழவிருக்கும்" (109:6) என்பர் புறநானூற்றுரையாசிரியர். 2 "மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்" (புறநா. 30:11-2) என்பதும், ‘பாய் களையாது பரந்தோண்டதென்பதனால் துறை நன்மை கூறியவாறாம்' என்ற அதன் விசேட உரையும் இங்கே அறிதற்குரியன.
|