பத்துப்பாட்டு பார் - பாற; மண்ணிடத்தே முதிர்ந்த கடலென்றுமாம். 46. சூர் முதல் தடிந்த சுடர் இல நெடு வேல் - சூரபன்மா வாகிய தலவனக் கொன்ற எரிகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேலாலே, 47. உலறிய கப்பின் - காய்ந்த மயிரினையும், பிறழ் பல் - நிரை ஒவ்வாத பல்லினையும், பேழ் வாய் - பெருமையையுடைய வாயினையும், 48. சுழல் விழி பசு கண் - கோபத்தாற் சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், 1சூர்த்த நோக்கின் - கொடுமை செய்த பார்வையினையும், 49-50.2கழல் கண் கூகையொடு கடு பாம்பு தூங்க பெருமுலை அலைக்கும் காதின்-பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடே கடிய பாம்பு தூங்குகையினாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், பிணர் மோட்டு - சருச்சரையையுடைய பெரிய உடலினையும், மோடு - வயிறுமாம். 51. உரு கெழு செலவின் - கண்டார் உட்குதல் பொருந்தும் நடையினையுமுடைய, அஞ்சுவரு பேய்மகள் - கண்டார்க்கு அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள், 52 - 3. குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் கண் தொட்டு உண்ட கழிமுடை கரு தலை - உதிரத்தையளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை, இனி, தொட்டென்பதனை வினையெச்சமாக்காது தொழிற்பெயராக்கிக் கண் தோண்டுதலுண்டவென்று கூறுதலுமாம். 54. ஒள் தொடி தட கையின் ஏந்தி - ஒள்ளிய தொடியினையுடைய பெருமையையுடைய கையிலே எடுத்து, 54-5. வெரு வர வென்று அடு விறல்களம் பாடி - அவுணர்க்கு அச்சந்தோன்ற வஞ்சியாது எதிர்நின்று கொல்கின்ற வெற்றிக்களத்தைப்பாடி, தோள் பெயரா - தோளையசைத்து, 56.நிணம் தின் வாயள் - நிணத்தைத் தின்கின்ற வாயினையுடையளாய்,
1சூர்த்தம் - நடுக்கம் (வேறுரை) 2கழல்கண் - சுழன்று விழுவதுபோலும் கண். கடும்பாம்பு - கோபத்தையுடய பாம்பு (வேறுரை)
|