407

போரைத்தாங்கும் பெரிய கையினையுடைய கடிய களிற்றை ஓட்டுகையினாலே,

597-8. [காணுந ரிட்ட, நெடுங்கரைக் 1காழக நிலம்பரலுறுப்ப :] காணுநர் நெடு கரை காழகம் இட்ட பரல் நிலம் உறுப்ப-அவ்வியானைக்கு முன்னேயோடி அதன் விசையைக்காணும் பரிக்காரர் அவ்வியானை பிடித்துக்கொள்ளுங்காலத்து மேல்வாராமல் அஞ்சி மீளுதற்குச் சமைப்பித்து நெடிய கரையையுடைய நீலநிறத்தையுடையபுடைவைகளிலே வைத்துச் சிந்தின கப்பணம் நிலத்தேகிடந்து கால்களைப்2பொதுக்கும்படி,

நெருஞ்சிமுள்ளுப்போல முனைபட இரும்பால் திரளச்சமைத்துத்தூவதற்கு யானையஞ்சுமென்று அவர்மடியிலேவைத்த கப்பணத்தைப்பரல் போறலிற் பரலென்றார் ; "வேழங் காய்ந்தனன் கடுக வுந்திக் கப்பணஞ் சிதறி னானே" (சீவக. 285) என்றார் பிறரும்.

599. கடு கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர - கடிய கட்டெளிவையுண்டு மகிழ்ச்சிமிக்குத் திரிதலைச் செய்ய,

ஓணநாளிற் (591) பொருது வடுப்படும் நெற்றி (595) முதலியவற்றையுடைய மறவர் (596) மகிழ்சிறந்து (599) பரலுறுப்பத் (598) திரிதர (599) எனக்கூட்டுக.

600. கணவர் உவப்ப புதல்வர் பயந்து-தம்கணவர் 3இம்மை மறுமையிற் பெரும்பயன் பெற்றேமென்று மகிழும்படி பிள்ளைகளை பெற்று,


1. காழகம்-நீலநிற உடை ; இது காளகமெனவும் வழங்கும் ; "காளக வுடையினள் காளி கூறுவாள்" (பாகவதம், 10. 1:81)

2. பொதுத்தல்-துளைத்தல், "அண்டத் தைப்பொதுத் தப்புறத் தப்பினா லாடும்" (கம்ப. இரணியன். 4); இச்சொல் பொதிர்த்தலெனவும் வழங்கும் ; "கழைப்பொதிர்ப்பத் தேன்சொரிந்து" (சீவக. 2778).

3. "இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமு மறுவின் றெய்துப, செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல்" (அகநா. 66:1-6) என்பதும், "உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி, இருமை யும்பெறற் கென்பது பெரியவரியற்கை" (கம்ப. 2. மந்திரப். 63) என்பதும், "இவையிரண்டுபாட்டானும் நன்மக்களைப்பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது", "இவை மூன்றுபாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது" (குறள், 63, 66, பரிமேல்.)என்பனவும் இங்கே அறியத்தக்கன.