பத்துப்பாட்டு பயந்தாராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன்தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிரத்தான் எறிய அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப்பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச்சென்றதென்று புராணங்கூறிற்று. இதனை, "பாயிரும் பனிக்கடல்" (5) என்னும்பரிபாடற்பாட்டானுணர்க. இவ்வாறன்றி1வேறு வேறு புராணங் கூறுவாருமுளர். இனி அவனுடல் அற்று வேறுவேறாம் வகையாலென்றுமாம். 59. அவுணர் நல்வலம் அடங்க - அவனையொழிந்த அவுணருடைய நல்லவெற்றி இல்லையாம்படி, அடங்க என்றது, "கணனடங்க" (சிறுபஞ்ச. 31) என்றாற்போலக் கொள்க. 59-60.2கவிழ் இணர் மா முதல் தடிந்த - கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின, என்றது, அவுணரெல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்த தொருமாவை வெட்டினானென்றவாறு. மறு இல் கொற்றத்து - குற்றமில்லாத வெற்றியினையும். 61.எய்யா நல் இசை - 3ஒருவரானும் அளந்தறியவொண்ணாத நல்ல புகழினையுமுடைய. செ வேல் சேஎய் - செய்ய வேலையுடைய சேய், எக்காலமும் போர்செய்தலிற் செவ்வேலென்றார், 4செய்யவனென்பது சேஎயென விகாரத்தால் நீண்ட தென்றுமாம், கடல் கலங்க உள் புக்குச் (45) சூர் முதலின் (46) ஒரு பேரியாக்கை (57) அறுவேறுவகையின் அஞ்சுவர மண்டிச்சென்று (58) பேய்மகள் (51) துணங்கை தூங்கும் படியாக (56) அச்சூர்முதல் தடிந்த வேலானே (46) பின்னும் அவுணர் நல்வலமடங்க (59) மாமுதல் தடிந்த கொற்றத்தினையும் (60)நல்லிசையினையுமுடையசேயெனமுடிக்க. கணவன் (6) மார்பினன் (11) சென்னியனாகிய (44) சேயென்பன ஒரு பொருள் குறித்த வேறுபெயராய் நின்றன.
1வேறு வேறு புராணமென்றது கந்தபுராணம், குமாரஸம்பவம் முதலியவற்றிற் கூறப்படும் செய்திகளை. 2மாயையினாலே கீழ் நோக்கிப் பூத்த மாவாய் நிற்குஞ் சூரபன்மனை முதலோடே தடிந்த (வேறுரை);பதிற்.11 : 4-5, உரை. 3"நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின்" (முருகு. 278) 4செய்யவன் - சிவந்தவன்; "செய்யன்" (முருகு. 206)
|