பெருவழுதியைப்போலே நீயும் நல்லாசிரியரிடத்தேகேட்சின் (208) என முன்னே கூட்டுக. என்றது, 1அந்தணர்க்குக்கூறியமுறையே முன்னுள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த்தத்துவங்களை யாராய்ந்து மெய்ப்பொருளுணர்ந்துவீட்டின்ப மெய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையேசென்றுவீட்டின்பத்தைப் பெற்ற குடுமியென்றவாறு. 763. நிலம் தரு திருவின் நெடியோன் போல - எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டினபெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையையுடைய நல்லாசிரியர் (761) என முன்னேகூட்டுக. என்றது, கண்ணன் எப்பொருளும் தானாயிருக்கின்ற படியைக் காட்டி ஸ்ரீ கீதை யருளிச்செய்து எல்லாரையும் போதித்தாற்போல எல்லாரையும் போதிக்கவல்லராகிய ஆசிரியரென்றவாறு. ஆணை - ஆக்கினை. 764-5. [வியப்புஞ் சால்புஞ் செம்மைசான்றோர், பலர்வாய்ப் புகரறு சிறப்பிற்றோன்றி :] வியப்பும் - நீ அவ்வாசிரியரிடத்துப்பெற்ற கந்தழியின் அதிசயமும், சால்பும்-பின்பு பெற்றமைந்த அமைதியும்,
களைச் செய்து சிறப்புற்றமையின்இப்பெயர் பெற்றான் ; "நற்பனுவனால்வேதத்,தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை, நெய்ம்மலியாவுதி பொங்கப் பன்மாண், வீயாச் சிறப்பின்வேள்வி முற்றி, யூப நாட்ட வியன்களம் பலகொல்"(புறநா. 15:17-21) என்பதனால் இவன் வேள்வி பல செய்ததறியப்படும்."கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குலந்தவிர்த்த,பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யென்னும்பாண்டியாதிராஜ(னா)ன், நாகமா மலர்ச்சோலைநளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும்பழனக் கிடக்கை நீர்நாட்டுச், சொற்கண்ணாளர்சொலப்பட்ட ஸ்ரீ திமார்க்கம் பிழையாத, கொற்கைக்கிழான் நற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்,கேள்வியந்த ணாளர் முன்பு கேட்கவென்றெடுத்துரைத்து,வேள்விச்சாலை முன்பு நின்று வேள்விகுடி யென்றப்பதியைச், சீரோடு திருவளரச் செய்தார் வேந்தனப் பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையான்" (வேள்விக்குடிச் சாஸனம், Epigraphia Indica Vol. 17, No. 16) என்றசாஸனப் பகுதியினால் இவன் வேள்விசெய்தார்க்குத்தானம் பல செய்தானென்பது அறியப்படுகின்றது.இவனைப் பற்றிய பிற செய்திகள், புறநானூற்றுப் பதிப்பிலுள்ளபாடப்பட்டோர் வரலாற்றால் அறியலாகும். 1.மதுரைக். 469 குறிப்புரையைப்பார்க்க.
|