43

62-3.[ சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு, நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும்:]

1புலம் பிரிந்து உறையும் அடி - மெய்ஞ்ஞானத்தான் அறிதலைக் கைவிட்டுத் தங்கும் திருவடி,

திருவடியே வீடாயிருக்குமென்றார்; அது, "தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித், தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி" (திருவா.திருவம்மானை, 6)2என்தபனானும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானு முணர்க.

சேவடி படரும் நலம் புரி கொள்கை செம்மல் உள்ளமொடு - அத்திருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்வினைகளைப் பலபிறப்புக்களிலும் விரும்பி நிகழ்த்தின கோட்பாட்டானே தலைமையினையுடைத்தாகிய உள்ளத்தோடே,

64. செலவு நீ நயந்தனை ஆயின் - செல்லுஞ் செலவை நீ விரும்பியே விட்டாயாயின்,

64-6.[ பலவுட, னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப, வின்னே பெறுதிநீ முன்னிய வினையே:]நீ முன்னிய வினை பலவுடன் தன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி - நீ முற்பிறப்பிற் கருதிச் செய்த நல்வினையாலே வீடுபெறுவார்க்கு உரியனவாகக் கூறிய நற்குணங்கள் பலவுஞ்சேர நன்றாகிய நெஞ்சத்திலுண்டாகிய இனிய வீடு பேற்றைத் தப்பாமல் இப்பொழுதே பெறுவை;

67. செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடு கெரடி - போரை வென்று விரும்பிக் கட்டின சேய்நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கு அருகே,

68. வரி புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியேவிடும்படி,என்றது : 3பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின வென்றவாறு.



1 தேசத்தைவிட்டு (வேறுரை)

2 முருகவேளுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடின்மையின் இங்கே திருவாசகத்தை யெடுத்துகாட்டினார்;100 -102-ஆம் அடிகளின் உரைக்கும் இஃது ஒக்கும்; "ஆதலி னமது சக்தி யறுமுகனவனும் யாமும், பேதக மன்றா னம்போற் பிரிவிலன் யாண்டு நின்றான், ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும், போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்" (கந்த. திருவிளை. 19) என்பது இங்கே அறியத்தக்கது.

3 "செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் .............. புரிசை" (பதிற். 53 : 6-9) என்பதற்கு, ‘சிலம்பும் தழையும் புரிசைக்கண்