புலவர் செய்யு ளுறுப்பு" (தொல். செய். சூ. 1.) எனத் தொல்காப்பியனார் கூறினமையின், இவரும் நல்லிசைப்புலவராதலின், இங்ஙனம் செய்யுள் செய்தாரென்றுணர்க. 1தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சிக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று. வெண்பா 1 | பைங்க ணிளம் 2பகட்டின் மேலானைப் பான்மதிபோல் திங்க ணெடுங்குடையின் கீழானை- 3அங்கிரந்து 4நாம்வேண்ட நன்னஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர் தாம்வேண்டுங் கூடற் றமிழ். | | | 2 | 5சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின் வண்டார் கமழ்தாம மன்றே 6மலையாத தண்டாரான் கூடற் றமிழ். |
1 (பி-ம்.) ‘பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்' 2 (பி-ம்.) ‘பகட்டுமேலானை' 3 (பி-ம்.) ‘தங்காது' 4 (பி-ம்.) ‘நாம்வேண்டு' 5 "பழுதகன்ற நால்வசைச்சொன் மலரெடுத்து" (திருவிளை. பாயிரம், 12) 6 மலையாத தண்தாரன்-ஏனையோர்களாலணியப்படாத ஆரத்தைப் பூண்டவன் ; என்றது இந்திரனால் தரப்பட்ட ஆரமணிந்ததைக் குறிப்பித்தபடி ; "செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி", "தேவ ரார மார்பன்" (சிலப். 11:24-5, 29 : "கந்துகவரி")
|