| |  | முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து
 துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
 |  | 35 | திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண்
 மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
 பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
 மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
 |  | 40 | செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத் தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
 திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
 நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
 மல்ல லாவண மாலை யயர
 |  | 45 | மனையுறை புறவின் செங்காற் சேவ லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
 திரவும் பகலு மயங்கிக் கையற்று
 மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
 கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
 | 
 
 31 - 2.  மு. பெரும்பாண் . 60- 61. 36. (பி - ம்.)‘ வள்ளியின் ' " வெள்ளி வள்ளியின் விளங்குதோள்" (சீவக. 420) 36 - 7. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ .94, பேர். 39. பிடகைப்பெய்த :  மதுரைக். 397. 39 - 40. செந்தொடையாவதன்றி மோனைத் தொடைப்பாடு இன்றென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர். 39 - 41.  பெருங்.  1. 33 : 74 - 5 43. மலர் தூவுதல் :  முல்லை. 8 - 10-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 43 - 4. "அகனக ரெல்லா மரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த, மாலை" (சிலப். 9 : 1 -3) சிலப். 9:1 - 4, அடியார். மேற். 45 - 6. மனையுறை புறவு மன்று தேர்ந்துண்ணல் : "மனையுறை குரீஇ, முன்றி லுணங்கன் மாந்தி மன்றத், தெருவினுண் டாது குடைவன வாடி" (குறுந். 46 : 2 - 4) 49. " கடியுடை வியனக ரவ்வே" (புறநா. 95 : 3) |