44

பத்துப்பாட்டு

69. பொருநர் தேய்த்த போர் அரு வாயில் - பொருவாரை இல்லையாக்குகையினாலே எக்காலமும் போர்த்தொழில் அரிதாகியவாயிலினையும்,

70. திரு 1வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திருமகள் வருத்த மின்றியிருந்த குற்றந்தீர்ந்த அங்காடித் தெருவினையும்,

71. மாடம் மலி மறுகில் கூடல் குடவயின் - மாடங்கள் மிக்க ஏனைத் தெருக்களையுமுடைய மதுரையின் மேற்றிசையிடத்து,

அம் சிறை வண்டின் அரி கணம் (76) - அழகினையுடைத்தாகிய சிறகையுடைய வண்டினுடைய அழகினையுடைய திரள்,

72. இரு சேரு அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த - கரிய சேற்றினையுடைய அகன்ற வயலிலே முறுக்கு நெகிழ்ந்து பின்பு தாதும் அல்லியும் தோன்ற மலர்ந்த,

73. முள் தாள் தாமரை துஞ்சி - முள்ளையுடைத்தாகிய தாளையுடையதாமரைப்பூவிலே இராப்பொழுது துயில்கொண்டு,

73-4. வைகறை கள் கமழ் நெய்தல் ஊதி -விடியற்காலத்தே தேன் நாறுகின்ற நெய்தற்பூவை யூதி,

எல் பட - ஞாயிறு தோன்றின காலத்தே,

75-7. [ கண்போன் மலர்ந்த காமரு சுனைமலர், அஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும், குன்றமர்ந் துறைதலு முரியன்:]

அஞ்சிறைவண்டி னரிக்கணமென்பது முன்னே கூட்டிற்று.

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - கண்ணையொக்க விரிந்த 2விருப்பமருவின சுனைப்


தங்கினவென்றது, ஈண்டுப் பொருவீருளீரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க' என்றெழுதிய விசேடவுரை இங்கே ஒப்பு நோக்கற்பாலது.

1வீற்றிருந்த வென்பதற்கு இங்கே கூறியவாறே சீவகசிந்தாமணியிலும் பொருளெழுதுவர்.

2" காமரு தும்பி" (சிறுபாண். 77), "காமருருவின்" (மதுரைக். 422) என்பவற்றில், ‘காமரு' என்பதற்கு இங்கே எழுதியவாறே விருப்பம் மருவினவென்றே பொருளெழுதுவர்; "காமரு நோக்கினை" (கலித். 80 : 14) என்பதில், ‘காமரு' என்பதற்கு விருப்ப மருவுகின்ற வென்றெழுதிய பொருளும், காமர்: கடைக்குறைந்து நின்றது; மருவும்: ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு மவ்வீறு சந்தியாற் கெட்டது" என்ற இலக்கணக் குறிப்பும் இங்கே பயன்படுவனவாம். " காமம் வருமென்பது விகாரத்தாற் காமருவென நின்று கண்டார்க்கு விருப்பம் வருமென்பதாயிற்று" என்பர் அடியார்க்கு நல்லார்; சிலப். 4 : 40.