கச்சாலே நடுவுவெளியான இடமறையும்படி கோக்கப்பட்டுக் குற்றமற்றுக் கக்சுக்கட்டிலென்னும் பெரிய பெயரையுடைய பாண்டிலெனக் கூட்டுக. தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப (120) புடைதிரண்டு இருந்த குடத்த (121) அடி (122) - சூல்முற்றி அசைந்த இயல்பினையுடையராகிய மகளிரது பால்கட்டி வீங்கின முலையையொப்பப் பக்க முருண்டிருந்த குடத்தையுடையவாய அடி, இஃது உருட்சிக்கு உவமைகூறிற்று. இடை திரண்டு (121) உள்ளிமுதல் நோன் அடி பொருத்தி அமைத்து (122) - குடத்திற்கும் கட்டிற்கும் நடுவாகிய இடம் ஒழுகமெல்லி தாய்த்திரண்டு உள்ளிமுதல்போலும் வலியினையுடையகால்களைத் தன்னிடத்தே தைத்துச்சமைத்துப் பேரளவெய்திய பாண்டிலென்க. உள்ளிப்புட்டில் போல்வதனை உள்ளிமுதலென்றார். 131-3. [ மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத், துணைபுணரன்னத்தூநிறத் தூவி, யிணையணை மேம்படப் பாயணை யிட்டு :] மெல்லிதின் விரிந்த இணை அணை சேக்கை - மெல்லியதாகவிரிந்த இணைதலணைந்த படுக்கையென்க. மேம்பட துணை புணர் அன்னம் தூநிறம் தூவி பாய் - அச்சேக்கைக்கு மேலாகத் தம்பேட்டைப்புணர்ந்த அன்னச்சேவலின் தூய நிறத்தையுடைய சூட்டாகியமயிர் பரக்கப்பட்டு, " சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண, முறுதூவி1 சேக்கையோரைந்து " (கலித். 72 : 1 : 8, ந. மேற். ; சீவக. 838, ந. மேற் .) என்ற ஐந்தினையும் படுத்ததென்பது தோன்ற 2இணையணை யென்றார். 3என்புருகி மிக்க அன்போடு புணர்தலிற் சூட்டிற்கு மென்மை பிறக்குமென்பது தோன்றத் துணைபுணரன்னத் தூநிறத் தூவி யென்
1 (பி - ம்.)‘ தாமிவையோ ரைந்து ', ' சேக்கையோடைந்து' 2" இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள் " (கலித். 72 : 1) என்ற விடத்து , ‘ ஐந்துவகைப்படப்படுத்தலால் உயர்ந்த நீலப்பட்டாற் செய்த மெல்லிய படுக்கையிடத்து ' என்றுரையெழுதுவர் நச்சினார்க்கினியர். 3 " துணையைப் புணர்ந்த காலத்து மெய்யுருகி உதிர்ந்த தூவிதானும் மிக மெல்லிதாயிருக்குமென்பது உணர்த்தற்குத் துணைபுணரன்னமென்றார் "(கலித் . 72 : 1 - 8, ந.) எனவும் , " புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்குமென்றார் "(சீவக. 189, ந ) எனவும் இவ்வுரையாசிரியரும், " தன் சேவலோடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகி உதிர்த்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்த பல்வகையணைமீதே " (சிலப். 4 : 58 - 71, அடியார்.) எனப் பிறரும் எழுதியவை இங்கே உணர்தற்குரியன.
|