227. வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப - மேகம் பெரிய மலையிடத்தைச்சூழ்ந்து கறுப்ப, 227-8. கானம் கல் என்று இரட்ட - காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் கல்லென்னுமோசையையுடையவாய் ஒன்றற்கென்று மாறிக் கூப்பிட, கானம் : ஆகுபெயர். 228. புள் இனம் ஒலிப்ப - பறவைகள் குடம்பைக்கண்ணேநின்று ஆரவாரிக்கையினாலே, 229-30. [1சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத், துனைஇய மாலை துன்னுதல், காணூஉ :] தெவிட்டப் (217) புகுதர (218) அகவ (220) உமிழப் (221) பயிற்றக் (222) கூம்புவிட (223) அயரப் (225) பொத்தக் (226) கறுப்ப (227) இரட்ட ஒலிப்பச் (228) செல்லமங்கடுப்ப (229) மாலை துன்னுதல் கண்டு (230) என முடிக்க. இவ்வெச்சங்கள் எதிர்காலமுணர்த்தின, "நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப" (தொல். அகத்திணை. சூ. 12) எனவே கால மிரண்டு மயங்குமென்றலிற் குறிஞ்சியின் மாலைக்காலங் கூறினார். 231-4. [நேரிறை முன்கை பற்றி நுமர்தர, நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட், கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென, வீர நன்மொழி தீரக் கூறி :] இலங்கிழையீர் - விளங்குகின்ற பூணினையுடையீர், நுமர் நேர் இறை முன்கை பற்றி தர நாடு அறி நல் நல் மணம் அயர்கம்- நும்முடையசுற்றத்தார் நுமது நேரிய இறையினையுடைய முன்கை யைப்பிடித்து எமக்குத்தர நாட்டிலுள்ளாரெல்லாமறியும் நன்றாகிய கலியாணத்தினைப் பின்பு நிகழ்த்துவோர் ; சில நாள் கலங்கள் ஓம்புமின் - என ஈரம் நல் மொழி தீர கூறி - யாம் இக்களவொழுக்கத்தாற்பெறும் பேரின்பம்பெறுதற்குச் சிறிது நாள் இங்ஙனம் ஒழுகாநின்றேமென்று நெஞ்சு கலங்குதலைப் பாதுகாப்பீராகவென்று அருளுடைத்தாகிய நல்லவார்த்தையை இவள்நெஞ்சில் வருத்தம் தீரும்படி சொல்லி, 235. 2துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து - ஆவைப்புணர்ந்த ஏறுபோலே விடாமல் எம்முடனே கூடவந்து,
1 .இதற்கு உரை கிடைத்திலது : சினைஇய - கோபித்த. சமம் - போர். துனைஇய -விரைந்த. 2 .135-6-ஆம் அடிகளின் உரையைப்பார்க்க.
|