51

1 - திருமுருகாற்றுப்படை

மாணாக்கர்க்கு நிறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று; "தன்னை யுன்னி யென்னை யாக்கிய போழ்தே யானவ னாயினேன்" (கலித். 43, ந. மேற்.) என்பதனானுணர்க.

இக்கைகள் எஞ்சிய பொருள்களை விளக்கு முகத்திற்கு (97-8) ஏற்றவாறுணர்க.

113-5. [ ஒருகை, கீழ்வீழ் 1தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை, பாடின் படுமணி யிரட்ட:] ஒருகை தொடியொடு மீமிசை கொட்ப கீழ்வீழ் ஒருகை பாடு இன் படு மணி இரட்ட - ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்பக் கீழே வீழ்ந்த மற்றைக்கை ஓசையினிதாகிய ஒலிக்கின்ற மணியை மாறியொலிக்கப்பண்ண,

இக்கை களவேள்வி வேட்கின்ற முகத்திற்கு (99 - 100) ஏற்றவாறுணர்க.

115 - 7. ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஒருகை நீலநிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்வியாநிற்க, ஒருகை தெய்வமகளிர்க்கு மணமாலையைச் சூட்ட,

என்றது : வள்ளியொடு நகையமர்ந்தமுகம் (100 - 102) உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்ததாகலின்,2அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை; ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்தற் பொருட்டு மணமாலையைச் சூட்டிற்றென்றவாறு.

117-8. 3ஆங்கு அ பன்னிருகையும் பால் பட இயற்றி - அப்படியே அந்தப் பன்னிரண்டு கையும் முகத்தின் பகுதியிலே படும்படி தொழில் செய்து,

முகங்களில் ஒருமுகம் ஓர்க்கும் (96) ஒருமுகம் விளக்கும் (98) ஒரு முகம் வேட்டன்று (100) ஒருமுகம் அமர்ந்தன்று (102) ஒருமுகம் விரிந்தன்று (92) ஒருமுகம் கொடுத்தன்று (94) அம்மூவிருமுகனும் அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையினாலே (103) அம்முகங்களுக்குப் பொருந்தத் தோள்களில் (106) இருகை (110) திரிப்ப (111) ஒருகை விளங்க (112) ஒருகை பொலிய (113) ஒருகை கொட்ப (114) ஒருகை இரட்ட (115) ஒருகை பொழிய (116) ஒருகை சூட்ட (117) ஒருகை ஐயர்க்கேந்தியது (107) ஒருகை உக்கஞ் சேர்த்தியது (108) ஒருகை கடாவ (110) ஒருகை


1. பார வளையோடே (வேறுரை)

2."நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு" (குறள், 20)

3. ஆங்கு - ஆக (வேறுரை)