512

(237) என்றும் (238) இரவில் வருமாலையன் ; வருதோறும் (239) கடுகினும் குரைப்பினும் (240) துயிலெழினும் வெளிப்படினும் (241) இன்றுயில் (242) பெறாமற் போவன் (243) ; அதுவேயன்றிப் பெயரினும் முனியலுறான் (243) ; இகந்தன்றுமிலன் (244) ; என்றும் (242) தீர்ந் தன்றுமிலாதவன் (245) மாயவரவினியல்புநினைந்து தேற்றுகையினாலே (246) இவள்கலுழும் (248) ; அங்ஙனம் அழுகின்றதற்குமேலே அவர் வருகின்ற (260) குழுமலைவிடரகம் (261) விழுமம் (260) உடையவென (261) நினையுந்தோறும் (251) சாஅய் (250) உறைப்பக் (249) கலங்கா நிற்கும் (251) ; இதுகாண் நல்வினை நிகழ்ந்தவண்ணமென்றாளென வினைமுடிக்க.

ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டிற்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.


வெண்பா

 1நின்குற்ற மில்லை நிரைதொடியும் பண்புடையள்
என்குற்றம் யானு முணர்கலேன் - பொன்குற் 
றருவி கொழிக்கு மணிமலை நாடன் 
தெரியுங்காற் றீய திலன்
2ஆற்றல்சால் கேள்வி யறம்பொரு ளின்பத்தைப்
போற்றிப் புனைந்த பொருளிற்றே - தேற்ற
மறையோர் மணமெட்டி னைந்தா மணத்திற் 
குறையாக் 1குறிஞ்சிக் குணம்.

1குறிஞ்சியென்றது இந்த நூலை.