| |  | யேறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி
 நீறாடிய களிறுபோல
 வேறுபட்ட வினையோவத்து
 |  | 50 | வெண்கோயின் மாசூட்டுந் தண்கேணித் தகைமுற்றத்துப்
 பகட்டெருத்தின் பலசாலைத்
 தவப்பள்ளித் தாழ்காவி
 னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
 |  | 55 | மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
 பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
 தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
 முதுமரத்த முரண்களரி
 |  | 60 | வரிமண லகன்றிட்டை யிருங்கிளை யினனொக்கற்
 கருந்தொழிற் கலிமாக்கள்
 கடலிறவின் சூடுதின்றும்
 வயலாமைப் புழுக்குண்டும்
 |  | 65 | வறளடும்பின் மலர்மலைந்தும் புனலாம்பற் பூச்சூடியு
 நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
 நாண்மீன் விராய கோண்மீன் போல
 மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
 | 
 
 44 - 7. " 'சோறு......... ஒழுகி' என்பதோவெனின், யாறென்ற துணையானே பேரியாறெனக்கொண்டு உலகிறந்தன வாகாமைக்கன்றே, ' ஏறுபொர............... கெழுமி' என்பதாயிற்றென்பது" (தொல். உவம. சூ. 10, பேர்.) 48. நீறாடியகளிறு : கலித். 97 : 9 - 10. 64 - 5. இவ்வடிகள் , வஞ்சிப்பாவிற் கலியடி வந்ததற்கு மேற்கோள் ; தொல். செய். சூ. 111, இளம் ; இ - வி. அடியோத்து, சூ. 8. யா - கா. ஒழிபு. 4, உரை ; இ - வி. சூ. 745, உரை.   தொல். செய். சூ. 108, பேர். மேற். 67. நீனிற விசும்பு முருகு . 116, குறிப்புரை. வலனேர்பு திரிதரு :முருகு. 1. |