600
கடவ தறிந்த வின்குரல் விறலியர் 
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ
தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
540குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப
லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
545சென்றது நொடியவும் விடாஅ னசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப் 
பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து 
திருநகர் முற்ற மணுகல் வேண்டிக்
கல்லெ னொக்க னல்வலத் திரீஇ
550யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத்
தகன்ற தாயத் தஃகிய நுட்பத் திலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்

536. இன்குரல் விறலியர் : (மலைபடு. 358)

534 - 6. முருகு. 212 , அடிக். ; மதுரை. 217 - 8, குறிப்புரை.

538. அருந்திறற் கடவுள் : (மணி. 6 : 60)

" கடவுட் பழிச்ச " (பதிற். 41 : 6)

541. பொருந. 176 ; பெரும்பாண். 466, ந. அடிக் ; புறநா. 165 : 1 - 2, குறிப்புரை.

542. பெரும்பாண். 445.

543. மலைபடு. 89 ; பெரும்பாண். 446, குறிப்புரை ; " பெய்ம்முகி லென்னக் கொடைக்கடனிறுக்கு மிக்குவாகு " (கூர்ம. சூரியன் மரபு. 8) 

544." மறம்வீங்கு பல்புகழ் " (பதிற். 12 : 8) ; (திருவாசகம், பொற்சுண்ணம், 18 ; பெரிய. திருநீலகண்டயாழ்ப். 5 ; திருவால. 56 : 9) ; " காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல் ", " மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாட, லென்ன " (சொக்கநாதருலா)

549. கல்லெனொக்கல் : (பெரும்பாண். 12, குறிப்புரை.)

550. உரும்பில் சுற்றம் : "உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி" (பெரும்பாண். 447)

553. "மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே" (புறநா. 27 : 6)