| வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக் கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென | 580 | மழைசுரந் தன்ன வீகை நல்கித் தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர் வென்றெழு கொடியிற் றோன்றுங் குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே. |
பரிசிலர்க்குத் தேரும் குதிரையுங் கொடுத்தல் : மதுரைக். 223 - 4, குறிப்புரை. பரிசிலர்க்கு யானை கொடுத்தல் : பொருந். 126 - 7, குறிப்புரை ; சிறுபாண். 142 - 3, குறிப்புரை ; மதுரைக். 99 - 102, குறிப்புரை. 579. ஞெரேரென : மலைபடு. 240. 580. மழை சுரந்தன்ன வீகை : (மலைபடு. 72 ; 75 - 6, குறிப்புரை) ; "எழிலி வான மெள்ளினன் றரூஉங், கவிகை வண்கைக் கடுமான் றோன்றல் " (தொல். எச்ச. சூ. 18, ந. உவம. 14, பேர். மேற்.) ; "மழை விழை தடக்கை வாய்வா ளெழினி" , "கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி" (தொல். உவம. சூ. 14, பேர். மேற்.) 582. வென்றெழுகொடி : முருகு. 67, குறிப்புரை ; முல்லை. 90 - 91, அடிக். ;"உரவுக் களிற்று வெல்கொடி" (பதிற். 88 : 17) 581 - 2. "பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப், பெருவரை மருங்கி னருவியி னுடங்க" (மதுரைக். 373 - 4) ; "வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்க", "வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து, வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெரு" , "வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்க" (பதிற். 25 : 11, 47 : 3 - 4,69 : 1 - 2 ) ;"களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, வொளிறுவன விழிதரு முயர்ந்துதோன் றருவி, நேர்கொ ணெடுவரை" , "பெருவரை யிழிதரு நெடுவெள் ளருவி, யோடை யானை யுயர்மிசை யெடுத்த, வாடு கொடி கடுப்பத் தோன்றுங், கோடுயர் வெற்பன்" (அகநா. 162 : 22 - 4, 358 : 12 - 5) ; "மனையிற்பொலி மாக நெடுங்கொடி மாலை யேய்ப்ப, வினையிற்றிரள் வெள்ளரு வித்திர டூங்கி வீழ" (கம்ப. கடறாவு. 50) ; "அமையநிற்கு மலங்கலேறு பிறங்க வெண்கொடி யாடுமா, லிமைய வெற்பு மதன்கணின்று மெடுத்த கங்கையு மென்னவே" (தக்க. 634) 583.நாடுகிழவோன் : "மலைகிழவோனே" (முருக. 317) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
|