605

7. இளி பயிர் இமிரும் குறு பரம் தூம்பொடு - இளியென்னும் நரம்பினுடைய ஓசையைத் தானொலிக்கும் குறிய மேலாகிய தூம்போடே,

இது குறுந்தூம்பு. பயிர் - தழைத்தல்.

8. 1விளிப்பது கவரும் தீ குழல் துதைஇ - பாட்டைச் சுருதி குன்றாமற் கைக்கொண்டு நிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டு,

9. நடுவு நின்று இசைக்கும் 2 அரி குரல் தட்டை - கண்களுக்கு நடுவே நின்றொலிக்கும் ஓசையையுடைய 3 கரடிகையும்,

இனித் தாளமானத்திடையே நின்றொலிக்கும் 4அரித்தெழுகின்ற ஓசையையுடைய வென்றுமாம்.

10. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி - விளக்கத்தையுடைத்தாகிய தாளத்தைக் கைக்கொண்டு ஒலிக்கும் வலிய வாயையுடைய 5 சல்லியும்,

11. நொடி தரு பாணிய பதலையும் - மாத்திரையைச் சொல்லும் தாளத்தையுடைய 6 ஒரு கண் மாக்கிணையும்,

பிறவும் - கூறாத வாச்சியங்களும்,

12. கார்கோள் பலவின் காய் துணர் கடுப்ப- கார்காலத்தாலே பழுத்தலையுடைய பலாவினது காயை மிகவுடைய தொத்தை யொப்ப,

13. நேர் சீர் சுருக்கி காய 7கலம் பையிர் - தம்மிலொத்த கனத்தையுடையவாகக் கட்டிக் காவின வாச்சிய முட்டுக்களையுடைய பையையுடையிராய்,


மத்தம் " (ஐங். 377 : 1 - 2) ; " ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பி னுயிர்க்கும் ", " செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக், குறுநெடுந் தூம்பொடு முழவுபுணர்ந் திசைப்ப " (அகநா. 111 : 8 - 9, 301 : 16 - 7)

1 விளிப்பது - பாடுவது ; திரி. 10 ; மணி. 4 : 13.

2 அரிக்குரற்றட்டை யென்பதற்குத் தவளையினது குரலையுடைய தட்டைப் பறையென்று பொருள் கோடலுமாம் ; " இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த், தேரை, தட்டைப் பறையிற் கறங்கு நாடன் " (குறுந். 193 : 2 - 3.) 

3 மதுரைக். 612 , குறிப்புரை.

4 " அரிக்கூ டின்னியம் " (மதுரைக். 612) என்பதற்கு, ' அரித்தெழும் ஓசையையுடைய சல்லி கரடி முதலியவற்றோடே கூடின இனிய ஏனைய வாச்சியங்கள் ' என்றார்முன். 

5 மதுரைக். 612, குறிப்புரை.

6 " பதலை யொருகண் பையென வியக்குமின் " (புறநா. 152 : 17)

7 " கலப்பை - யாழ் முதலியவற்றையுமிட்ட பெட்டிகள் " (சீவக. 864. ந.)