முழவொடே ஆகுளியும் (3) பாண்டிலும்(4) கோட்டொடும் (5) தூம்பொடும் (6) குறுந்தூம்பொடும்(7) தட்டையும் (9) எல்லரியும் (10) பதலையும் பிறவும்(11) தீங்குழலும் நெருங்கப்பட்டு (8) அவற்றைச்சுருக்கிக்காய கலப்பையிர் (13) என்க. 14. கடு கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்- கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்கமலையில், 15. படுத்து வைத்தன்ன பாறைமருங்கில் - படுத்துவைத்தாற் போன்ற, ஒத்தநிலமாகியகற்பாறையின் பக்கத்தில், 16. எடுத்து நிறுத்தன்ன இட்டு அரு சிறுநெறி - நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்து நிறுத்தினாற்போன்றஇட்டிய அரிய சிறியவழியை, 17. தொடுத்த வாளியர் துணை புணர்கானவர் - தொடுத்த அம்பினையுடையராய்த் தம் மனைவியரோடுகூடியிருக்கின்ற கானவர், 18. [இடுக்கண் செய்யா தியங்குந ரியக்கும்:] இயங்குநர் இடுக்கண் செய்யாது இயக்கும் - வழிபோவாரைவருத்துதலைச் செய்யாமல் வழிபோக்கும், 19 - 20. [ அடுக்கன் மீமிசை யருப்பம்பேணா, திடிச்சுர நிவப்பினியவுக்கொண் டொழுகி :]அடுக்கல் மீமிசை இடி சுரம் நிவப்பின் இயவு 1அருப்பம் பேணாது கொண்டு ஒழுகி - மலையிடத்து மிக்கஉயர்ச்சியிற் கல்லையிடித்த அருநிலத்தில் உயர்ந்தவழியைப் போதற்கு அரிதாகக் கருதாதே போதக்கடவேமென்றுநெஞ்சாலே கொண்டுநடந்து, கல்லையிடித்து ஆக்கிய வழி. சிலம்பிற் (14) பாறைமருங்கிற் (15)சிறுநெறியைக் (16) கானவர் (17) போக்கும் (18) சுரத்தில்இயவுக்கொண்டொழுகி (20) யென்க. 21. தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்- தொடியினது உறழ்ச்சியையொத்த உறழ்ச்சியையுடையஒன்பதென்னுமெண் உண்டான வார்க்கட்டினையும், 2 வலித்தல் மெலித்தல் செய்யவேண்டுதலின்,உறழ்ச்சி கூறினார். 22 - 4. [ கடிப்பகை யனைத்துங்கேள்வி போகாக், குரலோர்த்துத் தொடுத்தசுகிர்புரி நரம்பி, னரலை தீர வுரீஇ :] கேள்வி அனைத்தும் போகா - நூற்கேள்வி அடைய முற்றுப்பெற்று, 3 கடிப்பகை அனைத்தும் அரலைதீர உரீஇ - வெண்சிறுகடுகளவும்
1 அருப்பம் - அருமை. 2 " நெகிழ வேண்டுமிடத்து நெகிழ்ந்தும்இறுக வேண்டுமிடத்து இறுகியும் நரம்பு துவக்கும்வார்க்கட்டு " (சிறுபாண். 221 - 2, ந ; பெரும்பாண்.12 - 3, ந.) 3 பேய்க்குப் பகையாதலின் வெண்சிறுகடுகைக்கடிப்பகையென்றார் " ஐயவிக் கடிப்பகை "(மணி.7 : 73)
|