1 கொடும்பு இல்லையாம்படி 2தீற்றி, முடங்கிப் பரற்றன்மையிருத்தலிற்கொடும்பை3 அரலையென்றார். அரலை - குற்றமுமாம். இனி, வெண்சிறுகடுகளவும்கேள்விதப்பாதென்பாருமுளர் ; அது வடிவிற்கு உவமையாதலிற்பொருந்தாது. குரல் ஓர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின் - ஓசையை ஓர்ந்து பார்த்துக் கட்டினவடித்து முறுக்கின நரம்பினையும், கேள்வி போகா, உரீஇத் தொடுத்தநரம்பென்க. 24 - 5. வரகின் குரல் வார்ந்தன்ன நுண்துளை இரீஇ - வரகின் கதிர் ஒழுகின தன்மைத்தாகநெருங்கின நுண்ணிய துளைகளையிருத்தி, இது , 4பொல்லம் பொத்துமிடத்திற்றுளை.5 "பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்,கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை" என்றார்பிறரும். 26 -9. [சிலம்பமை பத்தல் பசையொடுசேர்த்தி, யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்,புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப், புதுவது போர்த்தபொன்போற் பச்சை :] இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி -விளங்குகின்ற துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளைஇறுகத் தைத்து, புதுவது வெண்கை புனைந்த யாப்புஅமைத்து - புதிதாக யானைக் கொம்பாற் செய்தயாப்பை அமையப்பண்ணி, யாப்பு - பத்தலிற் குறுக்கே வலிபெறஓட்டுவது. சிலம்பு அமை பத்தல் பசையொடுசேர்த்தி புதுவது போர்த்த பொன்போல் பச்சை -ஒலித்தலமைந்த பத்தலிலே 6பற்றோடே கூட்டிப்புதிதாகப் போர்த்த பொன்னிறம்போலும் நிறத்தையுடையதோலினையும், இரீஇ முடுக்கி அமைத்துச் சிலம்புதலமைந்தபத்தலிலே போர்த்த பச்சையென்க. 30 - 31. [ வதுவை நாறும் வண்டுகம ழைம்பான்,மடந்தை :] வண்டு வதுவை நாறும் ஐம்பால் மடந்தைதன்னிடத்திருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடையநாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினையுடையமடந்தை, வதுவைக்கு எல்லா மணமும் உளவாதல்பற்றிவதுவை நாறுமென்றார்.
1 கொடும்பு - கொடுமுறுக்கு (கொடி முறுக்கு) 2 தீற்றி - உருவி. 3 அரலை - சிறுகல். 4 பொல்லம் பொத்தல் - இரண்டுதலைப்பையுங் கூட்டித் தைத்தல் ; " பொல்லம்பொத்திய பொதியுறு போர்வை " (பொருந. 8) 5 பெரும்பாண். 7 - 8. 6 பற்று - பசின்.
|