612

என்னை எதிர்ப்படுகையினாலே நீர்புறப்படுகின்றபொழுது நுமக்குவரும் ஆக்கத்தை எதிர்கொண்டுநின்ற நன்முகூர்த்தத்தோடே நன்னிமித்தத்தையும்உடையிராயிருந்தீர், அறுதியாக ;

67. ஆற்றின் அளவும் - வழியினது நன்மையினதுஅளவும் தீமையினதளவும்,

அசையும் நல் புலமும் - நீர் தங்கும்நன்றாகிய இடங்களும்,

68. வீறு வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும் - பிறர் நாட்டுக்கு இல்லாத செல்வத்தைமாறாமற்கொடுக்கும் அவன் நாடு விளைகின்றஉணவுகளும்,

நாடெனவே 1 மலைநாடும் காட்டுநாடும் தண்பாணை நாடுங் கூறினார் ; அது மேற்காண்க.

69. மலையும் - அவனாட்டின் மலைகளின்தன்மையும்,

சோலையும் - அவனாட்டிற் சோலைகளின்தன்மையும்,

மா புகல் கானமும் - விலங்குகள்விரும்பித்திரியுங் காட்டின் தன்மையும்.

ஆற்றினதளவு முதலிய ஐந்தினையும்இக் கூறியமுறையே கூறாமல் மயங்கக் கூறுவர், கூறும்வழிக்கண்ஆண்டுள்ளனவே கூறவேண்டுதலின்,

70 - 72. தொலையா நல் இசை உலகமொடுநிற்ப பலர் புறம் கண்டு அவர் அருங்கலம்புலவோர்க்கு தரீஇ சுரக்கும் அவன் ஈகை மாரியும் - கெடாதநல்லபுகழ் உலகமுள்ளளவும் நிற்கும்படியாகப் பகைவர்பலரையும் முதுகுண்டு அவர் திறையாகத் தந்த பெறுதற்கரியபேரணிகலங்களை முற்பட அறிவுடையோர்க்குக் கொடுத்துப்பின் அவர்க்குச் சொரியும் அவன் பொன்மழையும்,

73. இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் -தன்னை இகழ்ந்திருக்கும் பகைவரை அரசுகொடாமற்சுருக்கும் அறிவின்வலியும்,

73 - 6. புகழுநர்க்கு அரசு முழுதுகொடுப்பினும் அமரா நோக்கமொடு தூ துளி பொழிந்தபொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள்மகிழ்இருக்கையும் - 2 சூதர் மாகதர் பாணர் கூத்தர்முதலியோர்க்குக் தான் புறங்கண்ட பகைவரரசை முற்றுங்கொடுப்பினும்அமைதி பிறவாத அறிவுடனே தூய துளியைப்பெருகச்சொரிந்த பருவம்பொய்யாத மேகம்பின்னரும் பெய்யுமாறுபோலப் பின்னரும் மாறாமற்சொரியும்அவனுடைய நாளோலக்கமும்,


1 மலைநாடு - குறிஞ்சி, காட்டுநாடு -முல்லை, தண்பணைநாடு - மருதம்.

2 சூதர் - நின்றேத்துவார் ; மாகதர்- இருந்தேத்துவார் ; மதுரைக். 676, .