613

நோக்கு - 1 நோக்கனோக்கம்." வீயாவீண்டும் " என வீயாமை அகற்சிமேற்று.

77 - 80. [ நல்லோர் குழீஇய நாநவிலவையத்து, வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்,சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதினியக்குமவன் சுற்றத் தொழுக்கமும் :] நா நவில் 2நல்லோர்குழீஇய அவையத்து சென்றோரை வல்லாராயினும் புறம்மறைத்து சொல்லி காட்டி சோர்வு இன்றி விளக்கிநல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் - தாம்கற்றவை நாவிடத்தே பயின்ற நல்ல அறிவினையுடையோர்திரண்ட தன் அவைக்களத்திடத்தே சென்ற அறிவுடையோரைத்தாம் கற்றவற்றை மனங்கொள்ளக் கூறமாட்டாராயினும்மாட்டாமையை மறைத்துத் தாம் பொருளைச்சொல்லிக்காட்டி அதனைத் தப்பின்றாக எல்லார்மனமுங்கொள்ளும்படி அறிவித்து நன்றாகநடத்தும்அவனுடைய சுற்றத்தாருடைய பேரொழுக்கமும்,


1 நோக்கு அல் நோக்கம் - கண்ணால்நோக்கும் நோக்கமன்றி மனத்தால் நோக்கும் நோக்கம்; அஃதாவது கருதுதல் ; தொல். வேற்றுமைமயங்கு. சூ.10, .

2 நல்லோர் குழீஇய அவை - நல்லவையும்நிறையவையும் ; அவற்றுள் , "நல்லவை யென்பது நாடுங்காலை, எத்துறை யானு மிருவரு மியம்பும், அத்துறை வல்லோரறனொடு புணர்ந்தோர், மெய்ப்பொருள் கண்டோர்மிக்கவை யோர்ப்போர், கற்றவர் கல்விக் கடாவிடையறிவோர், செற்றமுஞ் சினமுஞ் சேரா மனத்தோர்,முனிவொன் றில்லோர் மூர்க்கரல்லோர், இனிய முகத்தோரிருந்துரை கேட்போர், வேந்த னொருவர்க்குப்பாங்கு படினும், தாந்தா மொருவர்கட் பாங்கு படாதோர்,அன்னோர் முன்னரக் கூறிய பொழுதில், தொலையு மாயினுந்தொலைவெனப் படாது, வெல்லு மாயினு மிகச்சிறப்புடைத்தே ", "நிறையவை யென்பது நினையுங்காலை, எல்லாப் பொருளுந் தன்னகத் தடக்கி, எதிர்வருமொழிகளையெடுத்துரைப் பதுவே " (யா - வி. ஒழிபு.சூ. 3, மேற்.) ; "புகழுந்தருமநெறி நின்றோர்பொய்காமம், இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்,எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ, நல்லாயவைக்கு நலம் " , " நலனடக்கஞ் செம்மைநடுவுநிலை ஞானம், குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர், சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம் , அன்றோ நிறைந்த வவை " (வெண்பாப்பாட்டியல், பொது. 9, 10) ; " ஆறுட் பகைசெற் றருங்கலை யோர்ந்து,பாரிற் கீர்த்தி படைத்தோர் வைகுதல், நல்லவையடக்கம் வாய்மை நடுநிலை, சொல்லு நன்மை யுடையோர்தொகைஇ, வல்லார் மொழியினும் வல்லுநராக்கிக், கேட்போருறையவை நிறையவை யாகும் " (இ - வி. சூ. 936, உரை,மேற்.)