614

நவிலுதல் - கூறியடிப்படுதல் . சுற்றம்- கல்வியுடையோர்.

81 - 3. நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடு திறல் பெரு இசை நவிரம் மேஎய் உறையும் காரிஉண்டி கடவுளது இயற்கையும் - கடல் சூழ்ந்த உலகுநடுங்கும்அஞ்சுதல்தோன்றுங் கடியவலியையுடைய பெரிய புகழினையுடைய1நவிரமென்னுமலையைப் பொருந்தியிருக்கும்நஞ்சை ஊணாகவுடைய இறைவனது இயல்பும்,

பனிக்குங்காரி ; திறலினையுடையகாரி.

84 - 5. பாய் இருள் நீங்க பகல் செய்யாஎழுதரும் ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் -பரந்த இருள்நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து தோன்றும்2ஞாயிற்றையொத்த அவனுடைய 3பகையாகியஇருளைக் கடிந்த குற்றமில்லாத தலைமையும்,

86 - 9. [ 4இகந்தன வாயினுந் தெவ்வர்தேஎ, நுகம்படக் கடந்து நூழி லாட்டிப், புரைத்தோல்வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக், கொடைக்கடனிறுத்தவவன் றொல்லோர் வரவும் :] தெவ்வர் தேம்இகந்தனஆயினும் நூழிலாட்டி நுகம் பட கடந்து புரை தோல்வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு கொடை கடன்இறுத்த அவன் தொல்லோர் வரவும் - பகைவர் தேயம் சேணிகந்தனவாயினும்ஆண்டுச் சென்று 5தூசிப்படையைக் கொன்றுகுவித்துவலியுண்டாகவென்று பின்னர் உயர்ச்சியையுடையயானை அணிந்து நிற்கின்ற அணியிலே சென்று பொருத 6வேற்போரின்விளக்கத்தையுடைய அறிவுடையோர்க்குக் கொடுத்தற்குரியநாடும் ஊரும் முதலியவற்றைக் கொடுத்த அவனுடையகுடியிலுள்ளோர் தோற்றரவும்.


1 நவிரமென்னும் மலை இக்காலத்துத் திரிசூலகிரி யென்றும் பருவதமலை யென்றும் வழங்கப்படுகின்றது; இதில் காரியுண்டிக் கடவுளுடைய திருக்கோயில்இருக்கின்றது ; இக்காலத்து வழங்கும் அவரது திருநாமம் ஸ்ரீ காளகண்டேசுவரரென்பது ; இம்மலை திருவண்ணாமலையின்வாயுதிக்கில் (வடமேற்கில்) உள்ளது.

2 பகையைக்கடிதலுக்கு ஞாயிறுஇருளைக் கெடுத்தல் உவமை : " ஈண்டுநீர் மிசைத்தோன்றியிருள்சீக்குஞ் சுடரேபோல், வேண்டாதார் றனையை நின்பகைவர்க்கு" (புறநா. 59 : 6)

3 "உறை நிறுத்திய வாளினாற்பகையிரு ளொதுக்கி" (திருவிளை. நாடு. 1).

4 புறநா. 31 : 9 - 11.

5 தூசிப்படை - முற்படை.

6 வேற்போர் : யானையைக்குத்துதற்குவேலுரியதாகலின் யானையணியிலே வேற்போரைக் கூறினார்; மலைபடு. 129, குறிப்புரை.