1 காஞ்சிசான்ற வயவராதலின்,அவரைப் புலவரென்றார். 90 - 91. இரை தேர்ந்து இவரும் கொடு தாள்முதலையொடு திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின் -இரையைத் தேடியுலாவும் வளைந்தகாலினையுடைய முதலைகளோடேதிரையுண்டாக ஆழ்ந்த கல்லை யகழ்ந்த கிடங்கினையும், 92. வரை புரை நிவப்பின் வான் தோய்இஞ்சி - மலையையொத்த உயர்ச்சியையுடைய வானைத்தீண்டும்மதிலினையுமுடைய, 93 - 4. உரை செல வெறுத்த அவன் மூதூர்மாலையும் கேள் - புகழ் எங்கும் பரக்கும்படி செறிந்தஅவனுடைய பழைய ஊரினதியல்பும் இருக்கும்படி கேட்பாயாக ; ஆற்றினதளவு முதலியவற்றையெண்ணிஇன்னதும் இன்னதும் இருக்கும்படி கேட்பாயாக வெனமுடிக்க. 94. [ இனி வேளை நீ முன்னிய திசையே:] இனி நீ 2 வேளை முன்னிய திசையே கேள் - அவற்றில்இப்பொழுது நீ நன்னனைக் கருதிச் செல்கின்ற திசையைக்கேள் ; திசை ஆற்றினளவை யுணர்த்திநிற்றலின்ஆகுபெயராயிற்று ; ஏகாரம் : பிரிநிலை. 95 - 6. மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்புதுவது வந்தன்று - மிகுகின்ற செல்வம் முற்றுப்பெற்றபுதுவருவாயையுடைய ஊர்களாலே புதிதாகிய தன்மை வந்தது; 96. [இது வதன் பண்பே :] அதன் பண்புஇது - அவ்வழியின் செய்தி இத்தன்மைத்து ; 97 - 8. [வானமின்னு வசிவு பொழியவானா, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய : ஆனாதுஇட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய வானம் மின்னு வசிவுபொழிய - அமையாதே நிலத்தேயிட்ட விதைகளெல்லாம்இன்னவாறே விளையவேண்டுமென்று ஆண்டுள்ளார்விரும்பினாற்போலே விளையும்படியாக மேகம்மின்னாகிய பிளந்து வடுப்படுதலோடே பெய்கையினாலே, 99. பெயலொடு வைகிய வியல் கண் இருபுனத்து - அம்மழையோடே தங்கின அகன்ற இடங்களையுடையபெரிய கொல்லைநிலத்தே, 100 - 101 [அகலிரு விசும்பி னாஅல்போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை :] புல்கொடி முசுண்டை அகல இரு விசும்பின் ஆல்போல வாலிதின்விரிந்த - புல்லிய கொடியினை
1 காஞ்சி சான்ற வயவர் - நிலையாமையைஎப்பொழுதும் உள்ளத்துக் கொண்டிருத்தலமைந்த வீரர்; காஞ்சி சான்ற வயவர் பெரும " (பதிற். 65 : 4,90 : 39) 2 வேள் - நன்னன், மலைபடு. 163 -4, ந.
|