66

பத்துப்பாட்டு

மெல் தோள் பல் பிணை இயல - மெல்லிய தோளினையுடைய பலவாகிய மான்பிணைபோலும் மகளிர் குரவையாடி அசைய,

இவர்கள் மெய்தீண்டி விளையாடுதற்குரிய மகளிர்.

முழவு உறழ் தட கையின் தழீஇ ஏந்தி தலைத்தந்து - தன்னுடைய முழவையொத்த பெருமையையுடைய கையினாலே அவர்கள் கையினைத் தழீஇ எடுத்துக் கொண்டு முதற்கை கொடுத்து,

217. [ குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே :] குன்றுதொறு ஆடலும் தன் நின்ற பண்பு - மலைகடொறுஞ்சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணம்;

ஆடையன் (206) கண்ணியன் (208) என்பன முதலியன வினையெச்ச வினைக்குறிப்புமுற்று; "முன்னத்தி னுணருங் கிளவியு முளவே" (தொல். எச்சவியல், சூ. 63) என்னுஞ் சூத்திர விதியால் செய்தெனெச்சப் பொருளை உணர்த்தின,

கானவர் (194) குரவையயர (197) அதனைக்கண்டு மென்றோட் பல்பிணை (216) குரவையாடியசைய (215) அதனைப்பொறாதே செய்யன் (206) வேலன் (190) தொடுத்த கண்ணியைச்சூடி (192) உடுத்துப் (206) பொருந்திக் (207) கட்டி அணிந்து சூடி (208) ஊதிக் குறித்து எழுப்பிப் (209) பின்னிட்டு ஏறி (210) உயர்த்து வளர்ந்து தொடியை யணிந்து (211) துகிலையுடுத்துத் (214) தொகுதியுடனே (212) மகளிரோடே (205) மலைகடொறுஞ் சென்று (217) தழீஇ (216) ஏந்தித் (215) தலைத்தந்து (216) ஆடலும் நின்ற தன்பண்பென வினை முடிக்க.

1 "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் வென்றியு, மெய்தக் கூறு மியல்பிற் றாகும்" எனவரும்.

அதாஅன்று - அதுவன்றி,

பழமுதிர்சோலை

218. சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து - சிறிய தினையரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாகவைத்து மறியையறுத்து,

219. வாரணம் கொடியொடு வயின் பட நிறீஇ - கோழிக்கொடியோடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,

220. 2ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர் தோறும் ஊர்தோறும் எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்,


1. சிலப். பதிகம், 77, அடியார். மேற். "குரவை யென்ப தெழுவர் மங்கையர், செந்திலை மண்டலக் கடகக் கைகோத், தந்நிலைக் கொட்ப நின்றாட லாகும்" (ஷ ஷ) ; "குரவைக் கூத்தே கைகோத் தாடல்" (திவா.)

2. அடுக்கு, பன்மை (வேறுரை)