660

அவ்விடத்து நில்லாதே எம்முடைய பழையவூரே மீண்டும் போவேம் ; இஃது எங்களுக்கு விருப்பமென்று அவன் பொறுக்கச் சொல்லிஅவனைக் கைவிடின்,

568 - 9. நும்முள் தலைவன் தாமரை மலைய - நுங்களில் தலைவனானவன் பொற்றாமரையைச் சூட,

569 - 70. விறலியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய - விறல்பட ஆடுமகளிர் அழகுபொருந்தின தலைமையினையுடைய விளங்குகின்ற பேரணிகலங்களைப் பூண,

571. நீர் இயக்கு அன்ன நிரை செலல்நெடு தேர் - நீரின் செலவினை யொத்த நிரைத்துச்செல்கின்றசெலவினையுடைய நெடிய தேர்கள்,

572. வாரி கொள்ளா வரை மருள் வேழம் -யானைபடுகின்ற விடத்திற் பிடித்துக் கொள்ளாதமலையென்று மயங்கும் யானைகள்,

என்றது , பகைவர்திறைதந்த யானைகளை.

573. கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை - ஒலிக்கும் மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பெரிய பசுத் திரள்கள்,

574. பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி - பொன்னாற் செய்த கலனைமுதலியவற்றாற் பொலிவுபெற்ற மனச்செருக்கால் மயிரைப் பலகாலுங் கொய்யும்கழுத்தினையுடைய குதிரைகள்,

575. நிலம் தின கிடந்த நிதியமோடு - மண்தின்னும்படி பழைதாய்க்கிடந்த பொருட்டிரளோடே,

அனைத்தும் - எல்லாவற்றையும்,

576 - 7. இலம் படு புலவர் ஏற்ற கை நிறைய1கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தடகையின் - இல்லாமையுண்டான புலவர் ஏற்ற கைந்நிறையும்படி பேரணிகலங்களைச் சொரிகையினாலே கீழ்நோக்கின உழலுந் தொடியணிந்த பெரியகையினிடத்துண்டாகிய,

இதனாற் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரி (72)கூறினார்.

578.வளம் பிழைப்பு அறியாது - தான்கொடுத்த செல்வம் கெடுதலை யறியாதபடி,

578 - 9. வாய் வளம் பழுநி கழை வளர் நவிரத்து மீமிசை - வாய்த்த வளப்பம் முற்றுப்பெற்று மூங்கில்வளர்ந்த நவிரமென்னும் பெயருடையமலையிடத்துச்சியிலே,

579 - 80. ஞெரேரென மழை சுரந்தன்ன ஈகை - கடுக மழைசொரிந்தாற்போன்ற கொடையாலே,

580 - 81. [நல்கித், தலைநாள் விடுக்கும் பரிசில் :] தலைநாள் பரிசில் நல்கி விடுக்கும் -முதனாளிலே பரிசில்தந்து போகச்சொல்லும்,


1 " கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கை " (அகநா. 213 : 20)