அவற்றைப்பெற்றுஅதட்பள்ளியிலே (419) சேந்தனிர்கழிமின் (420) ;கழிந்து கூளியர்கூவைகாணிற் (422) படர்ந்திகுமெனின்(424) தடியும் கிழங்குந் தரீஇ (425) ஓம்புநரல்லதுஉடற்றுநரில்லை (426) ; அவற்றையருந்திவியங்கொண்மின் ; அதன்பண்பு அஃது (427) ;அப்பண்பைக்கண்டு கண்ணியைச் (430) சூடித் (431)தண்ணென (432) உண்டனிர் ஆடிக் கொண்டனிர்கழிமின்(433) ; கழிந்தாற் புளிங்கூழை (436) அற்குக் (437)குடிதொறும் பெறுகுவிர் (439) ; பெற்று அசையினிர்சேப்பின் (443) நுவணையோடு (445) அமலையை (441)இழுதுள்ளீடாக (442) அல்கலும் பெறுகுவிர் (443) ;அவற்றைப்பெற்று ஞெகிழிமாட்டித் (446) துஞ்சிப் (447)புள்ளோர்த்துக் கழிமின் (448) ; கழிந்தால் அவன்தன்பணைநாடு நன்பலவுடைத்து (453) ; அதனையடைந்தால்வினைஞர் வல்சிநல்கப் (462) பழையர் மகளிர் (459)விரைஇத் (458) தேறலை (463) நல்க (462) அவற்றைப்பெறுகுவிர் (464) ; அவற்றைப் பெற்றபின்புஅவரவரிட்ட வெண்சோற்றை (465) அருந்தி (468)மருதம்பண்ணிக் கழிமின் (470) ; கழிந்துஎருமையொருத்தல் (472) கதழ்ந்து வரல்போற்றிச் (473)சேயாற்றின் (476) ஒருகரைக்கொண்டனிர்கழிமின்(477) ; கழிந்தால் அவன்மூதூர் சேய்த்தன்று (487) ;அவ்வூரிற்சென்றால் அருங்கடிவாயிலை அயிராதுபுகுமின் (491) ; புக்காற் பரிசிலர் (492)கண்டோரெல்லாம் (495) எதிர்கொளக் குறுகிப் (496)பின்னர் முற்றமுன்னிக் (531)கடவுள் வாழ்த்தியபின்னர் (538) விருந்திற்பாணிகழிப்பிச் (539) செம்மலோயெனக் கூறி(543) ஏத்திச் (544) சென்றதுநொடியவும் விடானாய் (545)வருத்தமும் பெரிதெனக் கூறி (546) அணுகல்வேண்டி (548)நல்வலத்திரீஇ (549) மாய்ந்தோர் (553) மணலினும்பலர் (556) ; அதனால் நம் வரைந்தநாள் புகழொடுகழிகவென்று கருதிப் (557) பரந்திடங்கொடுக்குமுள்ளத்தோடே (558) அமர்ந்து நோக்கிக் (560)கலிங்கம் (561) வெள்ளரைக்கொளீஇப் (562) பலநாள்நிற்பினும் (566) தடியொடு (563) அரிசிமுட்டாது (564)தலைநாளன்ன புகலொடு (565) தரப்பெறுகுவிர் ; நில்லாது(566) செல்வேமென (567) விடுப்பின் (568)சென்றோரும்பல் (540) , நாடுகிழவோன் (583) , அவன்தன் கையிடத் துண்டாகிய (577) மழைசுரந்தன்னஇயல்பாகிய கொடைத்தொழிலாலே (580) வளம்பிழைப்பறியாதபடி (578) நிதியத்தோடே (575) தேர் (571) வேழம்(572) நிரை (573) புரவி (574) இவையனைத்தையும் (575)தலைவன்றாமரைமலைய விறலியர் (569) இழையணியத் (570)தலைநாளிலே பரிசிலாக (581) நல்கி (580) விடுக்கும்(581) ; ஆதலால், அவன்பாற் றாழாமற் கடிதாகச் சென்றுபரிசில்பெறுவீராகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இரணிய முட்டத்துப்பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பல்குன்றப்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்சேய்நன்னனைப் பாடிய மலைபடுகடாத்திற்குமதுரையாசிரியர் பாரத்துவாசிநச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.
|