வெண்பா | 1தூஉஉத் தீம்புகை தொல்விசும்புபோர்த்ததுகொல் பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப்பட்டான்கொல் மாஅ மிசையான்கோ னன்ன னறுநுதலார் மாஅமை யெல்லாம் பசப்பு. |
வெண்பா | முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. |
ப த் து ப் பா ட் டு
நச்சினார்க்கியருரை முற்றுப்பெற்றது.
1(பி-ம்.) 'தூஉஉய்த்தீம்புகையத்தொல்விசும்பிற் ' "தூஉஉத்தீம்புகை " என்பதில் தூஉஉ என்பது நான்குமாத்திரை பெற்று நின்றதாதலின், இது செப்பலோசைபிழையாது வந்ததென்பர் ஆசிரியர்நச்சினார்க்கினயர் முதலியோர் (தொல். நூன். சூ.6, ந ; யா - வி. எழுத். சூ. 4 ; இ - வி. சூ. 743) ;பேராசிரியர் வேறு கூறுவர் ; தொல். செய். சூ. 62.
|