68

பத்துப்பாட்டு

பலியை நுகராமல் 1தலை ஆண்மகன்றலையும், உடல் புள்ளின் வடிவுமாக எழுதின கொடி யென்க.

228. நெய்யொடு ஐயவி அப்பி - நெய்யோடே வெண்சிறுகடுகையும் அப்பி,

2ஐது உரைத்து - தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாமல் உச்சரித்து,

229. குடந்தம்பட்டு - வழிபட்டு,

வணக்கம்பட்டென்று உரைப்பர் ; குடவென்பது தடவென்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல்லாதலின், அதனடியாகப் பிறந்த பெயருமாம.்3

கொழு மலர் சிதறி - அழகிய மலர்களைத் தூவி,

230. முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - தம்மிற் பகைத்தல் கொண்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்து,

231. செ நூல் யாத்து - சிவந்தநூலைக் கையிலே காப்புக்கட்டி, நூலொழுக்கி எல்லைப்படுத்தென்றுமாம்.

வெள் பொரி சிதறி - வெள்ளிய பொரியைத்தூவி,

232. மத வலி நிலைஇய மா தாள் 4கொழு விடை - மிகுதியையுடைய வலி நிலைபெற்ற பெருமையையுடைத்தாகிய காலையுடைய கொழுவிய கிடாயினது,

233. குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி - உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியை,

234. சில் பலி செய்து - சிறுபலியாக இட்டு,

பல் பிரப்பு இரீஇ - பலபிரப்பும் வைத்து,

இனிப் பிரப்புக்கூடை யென்பாருமுளர்.

235. 5சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - சிறிய பசு மஞ்சளோடே நறிய சந்தன முதலியவற்றையும் தெளித்து,

இனிச் சிறுபசுமஞ்சள் மஞ்சளில் ஒரு சாதிவிசேடமுமாம்.


1. ஆண்டலை ஆண்மகன்றலை போன்றதென்பதும் பிறவும், "வெறுந்தலையே தலையாகி .............. ஆண்டலையா யற்றனமே" (தக்க. 234) என்பதனாலும் அதன் விசேடக் குறிப்பினாலும் விளங்கும்.

2. சிறிது மந்திரங்களையும்மோதி (வேறுரை)

3. இதன்பின்னே உள்ள, "குடந்தமாவது : நால்விரன் முடக்கிப் பெருவிர னிறுத்தி, நெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்" என்பது ஒரு பிரதியிலுள்ள பாடம்.

4யானைத்திரள் (வேறுரை)

5காட்டு மஞ்சள் (வேறுரை)