1 - திருமுருகாற்றுப்படை விரை : ஆகுபெயர். 236 - 7. [ பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையற வறுத்துத் தூங்க நாற்றி :] பெரு தண் கணவீரம் மாலை பெரிய குளிர்ந்த செல்வலரி மாலையையும், நறு தண் மாலை - ஒழிந்த நறிய குளிர்ந்த மாலைகளையும், அறுத்து - தலையொக்க அறுத்து, 1துணை அற தூங்க நாற்றி - தமக்கு ஒப்பில்லாதபடி அசையத் தூக்கி, இனித் தம்மில் இணையொத்த அறுப்பாக அறுத்தென்றுமாம். 238. நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி - செறிந்த மலைப் பக்கத்திலுள்ள நல்ல ஊர்களைப்2பசியும் பிணியும் பகையும் நீங்குக வென்று வாழ்த்தி, நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம். 239. நறு புகை எடுத்து - நறிய தூபங்கொடுத்து, குறிஞ்சி பாடி - அந்நிலத்திற்கு அடைத்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி, 240. இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க - முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடே இனிய பல்லியங்களும் ஒலியா நிற்க, 241 - 2. உருவம் பல் பூ தூஉய் வெருவர 3குருதி செந்தினை பரப்பி - சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி அச்சம் வரும் படி உதிரமளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, 242 - 4. குறமகள் 4முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க5முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியன் நகர் - குறச்சாதியாகிய மகள் முருகன் உவக்கும் வாச்சியங்களை வாசிக்கப்பண்ணித் தெய்வமின்றென்பார் அஞ்சும்படியாகப் பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகற்சியையுடைய நகரின் கண்ணே, "வேலன் வெறியாட் டயர்ந்த" (தொல். புறத். சூ. 5) என்புழிச் சிறுபான்மை ஏனையோரும் ஆடுவாரென்றலின் குறமகள் வெறியாட்டுக் கூறினார்.
1. துணை அற அறுத்து - இணையொக்க நறுக்கி, தூங்கநாற்றி - அசைதரப் பூங்கோயிலாகத் தூக்கி (வேறுரை) 2. "பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" (சிலப். 5 : 72 - 3; மணி. 1 : 70 - 71) 3. உதிரம் போன்ற செந்தினை (வேறுரை) 4. முருகியம் - துடி; தொண்டகப்பறையெனினும் அமையும் (வேறுரை); முருகியமும் தொண்டகப்பறையும் குறிஞ்சிக்குரிய பறையென்பர் ;தொல். அகத். சூ. 18, ந. 5.பிள்ளையாரைத் தம்வழிப் படுத்தின (வேறுரை)
|