அடியிலுள்ள பாடல்கள், பத்துப் பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப்பிரதிகளிலில்லாமல் திருமுறுகாற்றுப்படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப்பிரதிகளிலும் அச்சுப்பிரதிகளிலும் இருந்தமையால் தனியே பதிப்பிக்கப்பெற்றன; திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலுள்ள, "உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண்டல முவப்ப, வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகந் திறக்கவேல் விட்டு, நயனொடு மெடுத்து வினைகடீர்த் தருளு நன்சுனை காட்டிநீ ராட்டி, அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென்றாலயத் தடைந்தனன் காண", "இனிதொர்கவி குன்றமெறிந் தாயெனப்பி னென்றுமினை யாயழகி யாயென் னுங்கான், மனமகிழ்ந்தீ தியார்பகர்வா ரவர்க்கு வேண்டும் வரங்கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போந்து, கனமலிசங் கத்துரைப்பக் கேட்டி யாருங் களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்தி" (44 : 27-8) என்னும் வரலாற்றை நோக்குங்கால், "குன்ற மெறிந்தாய்" என்னும் வெண்பா அந்நூலாசிரியர் காலத்தே வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. 1 | குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய் புன்றலைய பூதப் பொருபடையாய் - 1என்றும் இளையா யழகியா யேறூர்ந்தா னேறே உளையாயென் னுள்ளத் துறை. | 2 | குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங்2 கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். | 3 | வீரவே றாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வே டிருக்கைவேல் - வாரி |
1. "என்றுமழி யாத விளமைக்கார" (திருப்புகழ்) 2. பொதும்பு - முழை. கற்பொதும்பிற் காத்த வரலாற்றை, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 44-ஆம் திருவிளையாடலாலும்,சீகாளத்திப்புராணம்நக்கீரச்சருக்கத்தாலும்அறியலாகும்.
|